News March 28, 2024
வெற்றிகரமாக வானில் பறந்த தேஜாஸ் L.A.5033

உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸின் L.A.5033 ரக முதல் விமானம் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. தேஜாஸ் M.K.1A என்ற பெயரில் நவீன அம்சங்களுடன் கூடிய இலகுரக விமானத்தை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த நிலையில், L.A.5033 ரக முதல் விமானம் வானில் சுமார் 18 நிமிடங்கள் வட்டமடித்தப் பின் தரையிறக்கப்பட்டது. இந்த சோதனை, போர் விமான உற்பத்தி செயல்முறையில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
Similar News
News October 28, 2025
இந்தியாவின் டாப் 5 பணக்கார கோயில்கள்!

இந்தியாவில் துட்டு கொட்டோ கொட்டு’னு கொட்டும் கோயில் திருப்பதி என அனைவரும் அறிவோம். ஆனால், திருப்பதியை போலவே நாட்டின் பணக்கார கோயில்கள் லிஸ்ட் உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அந்த லிஸ்ட்டை பார்க்கவும். இவற்றில் எந்தெந்த கோயில்களில் நீங்க தரிசனம் செஞ்சிருக்கீங்க?
News October 28, 2025
வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த USA

அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கிரீன் கார்டு வைத்திருக்கும் வெளிநாட்டினர் உள்பட அனைவரும் நாட்டிற்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும் facial recognition மற்றும் பயோமெட்ரிக் சோதனைக்கு உட்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் வைத்திருப்பவர்களை கண்டறிய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News October 28, 2025
FLASH: தொடர் ஏறுமுகத்தில் இந்திய பங்குச்சந்தைகள்!

நேற்று போல் இன்றும் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. அதன்படி சென்செக்ஸ் 108 புள்ளிகள் உயர்ந்து 84,887 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. அதேபோல் நிஃப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 26,000 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. HDFC, BHARATHI AIRTEL, SBI உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. அதேநேரம், ICICI, BAJAJ FINANCE, AXIS BANK உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளன.


