News September 10, 2025
Tech Tips: கம்மி விலைக்கு iPhone வாங்கலாம்

iPhone 17 வாங்க பணம் இல்லையா? உங்களாலும் குறைந்த விலையில் நல்ல iPhone வாங்கமுடியும். iPhone 17-ஐ ஆப்பிள் Lauch செய்துள்ளதால் பழைய மாடல்களின் விலை குறையும். அதன்படி, ₹55,000-க்கே கிடைக்கும் iPhone 15-ஐ நீங்கள் வாங்கலாம். ஒருவேளை உங்கள் பட்ஜெட் ₹40,000-க்கும் கீழ் இருந்தால் iPhone 13-ஐ வாங்குங்கள். செப்.22-ல் தொடங்கவுள்ள பிளிப்கார்ட் சேலில் இதன் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News September 10, 2025
எப்புட்றா.. வாழைப்பழம் வாங்க ₹35 லட்சம் செலவு..!

உத்தராகண்ட் கிரிக்கெட் சங்கத்தில் நிதி முறைகேடுகள் நடப்பதாக அம்மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறிப்பாக, வீரர்களுக்கு வாழைப்பழம் வாங்கியதில் ₹35 லட்சம் செலவானதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், BCCI மற்றும் உத்தராகண்ட் கிரிக்கெட் சங்கம் முறைகேடு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
News September 10, 2025
புல்லட் பைக்குகளின் விலையை குறைத்த RE!

GST 2.0 எதிரொலியாக பல கார் நிறுவனங்கள் விலையை குறைத்தன. அந்த வகையில், ராயல் என்ஃபீல்ட் நிறுவனமும் தங்களது 350CC பைக் மாடல்களின் விலையை ₹22,000 வரை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு வரும் 22-ம் தேதி அமலுக்கு வரும். எந்தெந்த மாடல்களின் விலை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை, மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News September 10, 2025
மீண்டும் பிச்சைக்காரன் காம்போ.. இம்முறை நூறுசாமி!

விஜய் ஆண்டனிக்கு நடிகராக பெரிய வெற்றியை கொடுத்தவர் இயக்குநர் சசி. இன்றுவரை தோல்வி படங்கள் கொடுத்த போதிலும், விஜய் ஆண்டனி நடிகராக தொடர பிச்சைக்காரன் தான் காரணம். அப்படத்தின் பார்ட் 2 வெளிவந்தாலும், அதனை சசி இயக்கவில்லை. இந்நிலையில்தான், தற்போது மீண்டும் சசி- விஜய் ஆண்டனி காம்போ கைகோர்த்துள்ளது. ‘நூறுசாமி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், அடுத்த ஆண்டு மே 1-ம் தேதி வெளியாக உள்ளது.