News August 31, 2025
Tech Talk: இந்த 5 தகவல்களை ChatGPT-யிடம் சொல்லிடாதீங்க..

ChatGPT-யிடம் சாதாரண கூட்டல் கணக்கில் தொடங்கி, மருத்துவ ஆலோசனை வரை கேட்க தொடங்கிவிட்டனர். ஆனால் தகவல் திருட்டை தடுக்க இதுபோன்ற AI தளங்களில் பகிரவே கூடாத விஷயங்கள் சில உள்ளன. ▶தனிப்பட்ட அடையாள தகவல்கள் ▶வங்கி கணக்கு எண், முதலீட்டு விவரங்கள் ▶பணிபுரியும் நிறுவனம் சார்ந்த தகவல்கள் ▶மருத்துவ குறிப்புகள், நோயின் விவரம் ▶Password விவரங்களை பகிர வேண்டாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.
Similar News
News September 1, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 1, ஆவணி 16 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்:6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: நவமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
News September 1, 2025
தமிழகம் வருகிறார் ஜனாதிபதி முர்மு

3 நாள்கள் பயணமாக ஜனாதிபதி திரெளபதி முர்மு கர்நாடகா மற்றும் தமிழகம் வருகிறார். இன்று மைசூரில் நடைபெறும் AIISH வைர விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து நாளை (செப்.2) தமிழகம் வரும் அவர், சென்னையில் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது நிறுவன நாளில் பங்கேற்கிறார். செப்.3-ல் திருவாரூர் மத்திய பல்கலையின் 10-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிவிட்டு டெல்லி திரும்புகிறார்.
News September 1, 2025
IND Vs AUS: அனைத்து வீரர்களுக்கும் பாஸ்

இந்திய அணி, ஆஸி.,க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், வீரர்களுக்கான உடற்தகுதி சோதனைகள் நிறைவு பெற்றுள்ளன. ரோஹித் சர்மா, சுப்மன் கில், பும்ரா உள்பட இப்பரிசோதனையில் பங்கேற்ற அனைவரும் பாசிட்டிவ் ரிசல்ட் பெற்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். அக்.19-ல் தொடங்கும் இத்தொடரில் 3 ODI மற்றும் 5 T20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இவை நவ.8-ல் நிறைவு பெறுகின்றன.