News September 16, 2024
Tech Talk: இதை செகண்ட் ஹேண்டில் வாங்காதீங்க!

அவசர தேவை, பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களால் Second Hand பொருட்களை பலர் வாங்குவது வழக்கம். எந்த காரணமாக இருந்தாலும் சரி, ஆடியோ அக்ஸஸெரீஸ்களை செகண்ட் ஹேண்டில் வாங்க கூடாதென டெக்கிஸ் அறிவுறுத்துகின்றனர். இவை PreHack செய்யப்பட்டால் அந்நியர்களுக்கு சாதகமான அணுகலை வழங்கி, நமது Privacyக்கு அச்சுறுத்தல் அளிக்கலாம். அத்துடன், பழைய நிலையில் Audio Experience கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.
Similar News
News August 14, 2025
அரசியல் எதிரிகள் பார்த்த வேலை: தங்கமணி வேதனை

முன்னாள் அமைச்சர் தங்கமணி திமுகவில் இணையப்போவதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சை இருந்த போதும், திருச்சியில் இபிஎஸ் சுற்றுபயணத்துக்காக தான் கட்சிப்பணி மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். தன்னை குறித்து வந்த இச்செய்தியை எண்ணி மனவேதனைப்படுவதாகவும், அரசியல் எதிரிகளின் தவறான தகவல் செய்தியாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
News August 14, 2025
அன்னை தெரசாவின் பொன்மொழிகள்

*சிறிய விஷயங்களில் உண்மையாக இருங்கள், அதில் தான் உங்களது வலிமை உள்ளது.
*நீங்கள் மக்களை மதிப்பீடு செய்துகொண்டிருந்தால், அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரம் இருக்காது.
*மற்றவர்களுக்காக வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல.
*உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியவில்லையென்றால், வெறும் ஒருவருக்காவது உணவளியுங்கள்.
News August 14, 2025
ராகுல் காந்தி உயிருக்கு ஆபத்து: பாதுகாப்பு வழங்க கோரிக்கை

2023-ம் ஆண்டு லண்டனில் சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதனை எதிர்த்து சாவர்க்கரின் பேரன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். புனே நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், ராகுல் வழக்கறிஞர் தரப்பில் மனு சமர்ப்பிக்கப்பட்டது. அதில் சாவர்க்கர், கோட்சே ஆதரவாளர்களால் ராகுல் உயிருக்கு ஆபத்து உள்ளதால், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.