News August 21, 2025
Tech Talk: டெலிகிராம்ல Free-ஆ மொழிகள் கத்துக்கலாமா?

டெலிகிராம் மெசேஜ் அனுப்ப மட்டுமே பயன்படும் சாதாரண செயலி அல்ல. இதில் இருக்கும் Bots அன்றாடம் உங்களுக்கு தேவையான பல சேவைகளை வழங்குகிறது. 1.YSaver – இந்த Bot-ல் உங்களுக்கு தேவைப்படும் யூடியூப் Link-ஐ கொடுத்தால் அது அந்த வீடியோவை டவுன்லோடு செய்து கொடுக்கும். 2.AI IMAGE GENERATOR – இதில் AI புகைப்படங்களை இலவசமாக பெறலாம். 3.Learn Languages AI – இதில் பல மொழிகளை இலவசமாக கற்றுக்கொள்ளலாம். SHARE.
Similar News
News January 16, 2026
மீண்டும் ரேஸில் முந்துகிறாரா சிவகார்த்திகேயன்?

பொங்கலை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் வெளியானது. முதல் 2 நாள்கள் நல்ல வசூல் இருந்தாலும், பின்னர் குறையத் தொடங்கியது. இந்நிலையில், பொங்கல் விடுமுறை தொடங்கியதும் கலெக்ஷன் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று பொங்கல் நாளில் ₹10 கோடி வசூலித்துள்ளதாகவும், விரைவில் ₹100 கோடி கிளப்பில் இணையும் என்றும் கூறப்படுகிறது.
News January 16, 2026
இவர்களுக்கும் பொங்கல் பரிசு.. ஹேப்பி நியூஸ்

TN-ல் பொங்கல் தொகுப்புடன் ₹3,000 ரொக்கமும் வழங்கப்பட்டது. பயனாளிகள் யாரும் விடுபடக்கூடாது என்பதற்காக 14-ம் தேதியும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. சிலர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றதால், இன்னும் பரிசை வாங்காமல் உள்ளனர். இதனால், இம்மாதம் இறுதி வரை பொங்கல் பரிசு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு நாள்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
News January 16, 2026
ஜன நாயகனுக்கு ஆதரவாக வைரமுத்து

சினிமாவை கலையாக பார்க்க வேண்டுமே தவிர அரசியலாக பார்க்க கூடாது என ஜன நாயகன் சென்சார் விவகாரம் குறித்து வைரமுத்து பேசியுள்ளார். தணிக்கை விதிகள் சூழ்நிலைக்கேற்ப மாற்றப்படுவதற்கு பதிலாக ஒரு நிரந்தரமான விதியை வகுத்தால் தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார். மேலும், 1952-ல் வெளியான பராசக்தி படத்தை மட்டுமே பார்த்துள்ளதாகவும், அது சிவாஜியும், கருணாநிதியும் TN-க்கு அளித்த கொடை எனவும் தெரிவித்துள்ளார்.


