News October 5, 2024
Tech Talk: மடிக்கணினி வாங்குவோர் கவனத்திற்கு

புதிய லேப்டாப் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி இங்கே பார்க்கலாம். 16GB RAM, 512GB SSD கார்டு, திரையைப் பொறுத்தவரை முழு HD 1920×1080 மேற்பட்ட தெளிவுத்திறன், 6 மணிநேர பேட்டரி கொள்திறன் கொண்டதை தேர்ந்தெடுக்கலாம். USB-C, HDMI & Wi-Fi 6 போன்ற முக்கிய இணைப்புகள் இருப்பதை உறுதி செய்யவும். சேவை & உத்தரவாதத்தை வழங்கும் விற்பனையாளரிடம் இருந்து
மாடலை சோதித்து லேப்டாப் வாங்குவதே சிறந்தது.
Similar News
News August 13, 2025
ODI தரவரிசை: மாஸ் காட்டும் இந்தியாவின் டாப் 3!

வெளியிடப்பட்டுள்ள ODI தரவரிசையில், இந்தியாவின் சுப்மன் கில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். கில் 1-ம் இடத்திலும், ரோஹித் 2-ம் இடத்திலும், கோலி 4-ம் இடத்திலும் உள்ளனர். இது ODI ஃபார்மெட்டில் இந்திய பேட்டர்களின் ஆதிக்கத்தை காட்டுகிறது. ODI-யில் இருந்து ரோஹித், கோலி இருவரும் ஓய்வு பெற வேண்டும் என்ற விமர்சனத்திற்கு இது பதிலடியாகவும் அமைந்துள்ளது.
News August 13, 2025
AI-யால் செய்யவே முடியாத வேலைகள்..பட்டியல் இதோ!

AI-யால் வேலை பறிபோகும் அச்சம் மக்களிடையே இருக்கிறது. அந்த வகையில் AI-யால் செய்யவே முடியாத வேலைகளின் பட்டியலை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ளது. செவிலியர், ரத்த மாதிரிகளை எடுப்பது, தீயணைப்பு பணி, எலக்ட்ரிஷியன் பணி, கப்பல் பொறியாளர் போன்ற வேலைகளை AIயால் செய்யமுடியாதாம். சில வேலைகளில் மனிதர்களின் பங்கும் வேண்டும் என்பதால் AI-யால் முற்றிலுமாக அதனை செய்யமுடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
உருவானது காற்றழுத்தம்.. கனமழை வெளுக்கும்!

வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகியுள்ளது. அது நாளை மேலும் வலுப்பெறும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், கோவை, நீலகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 நாள்களுக்கு தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியே செல்பவர்கள் குடையை மறக்க வேண்டாம்!