News September 1, 2025
Tech: கூகுள் Storage-ஐ காலி செய்ய சிம்பிள் Tips..

உங்கள் ஃபோனில் கூகுள் Storage Full ஆகிவிட்டால், Extra Storage-காக பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த சீக்ரெட் டிரிக்ஸை செய்தாலே Storage Clear ஆகும். Google Drive(Desktop)→Settings→manage apps→Hidden App Data→Delete செய்யுங்கள். 2வது வழி, Google Photos→Settings→Backup Quality→Storage Saver→Recover Storage என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்க. இப்படி செய்தாலே Storage Clear ஆகும். SHARE.
Similar News
News September 1, 2025
உங்கள் மகளுக்கு 21 வயதில் ₹60 லட்சம் கிடைக்கும் சூப்பர் திட்டம்

பெண் பிள்ளை வைத்திருப்போரின் பெரிய கவலையே எப்படி அவர்களுக்கு பணம்/நகை சேர்ப்பது என்பதுதான். மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் மூலம் உங்கள் மகளுக்கு 21 வயதாகும் போது அதிகபட்சமாக ₹69,27,578 லட்சம் கிடைக்கும். இத்திட்டத்தில் ₹250 – ₹1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். உங்கள் குழந்தைக்கு 10 வயது முடிவதற்குள் அருகில் இருக்கும் வங்கியை அணுகி இத்திட்டத்தில் சேருங்கள். SHARE.
News September 1, 2025
BJP கட்டுப்பாட்டில் EC: திருமா

தேர்தல் ஆணையம் முழுமையாக பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். பாஜக, சங் பரிவார் அமைப்புகள் தமிழ்நாட்டிலும் தேர்தல் முறைகேட்டில் ஈடுபடலாம் என சந்தேகத்தை எழுப்பிய அவர், 30 நாள்கள் சிறையில் இருந்தால் பதவியை பறிக்கும் சட்டத் திருத்தம் பாசிசத்தின் உச்சம் என்றும் சாடினார். மேலும், திமுக கூட்டணி சார்பில் நாளை நடைபெறும் போராட்டத்தில் தான் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
News September 1, 2025
TTV தினகரனுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

TTV தினகரன் NDA கூட்டணியில் இருப்பதாக நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார். நெல்லையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், 2024 தேர்தலில் இருந்தே தங்களுடன்(NDA) பயணிக்கும் அவர், எங்களுடன் தான் இருக்கிறார் என்பதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றார். முன்னதாக NDA கூட்டணியில் AMMK இருக்கிறதா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரனிடம் கேளுங்கள் என <<17579258>>டிடிவி தினகரன்<<>> கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.