News August 30, 2025

TechTalk: ஒரே WhatsApp-ல் 2 கணக்குகள் வைப்பது எப்படி?

image

Official WhatsApp, Personal WhatsApp என தனித்தனியாக WhatsApp பயன்படுத்துகிறீர்களா? இதற்காக Dual WhatsApp போன்ற பாதுகாப்பு இல்லாத செயலிகளை பயன்படுத்த வேண்டாம். ஒரே WhatsApp-ல் 2 கணக்குகளை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். இதற்கு, முதலில் WhatApp settings-க்கு செல்லுங்கள். உங்கள் Profile Photo-வுக்கு அருகில் காட்டும் ’+’ குறியீட்டை க்ளிக் செய்து ‘Add Account’ கொடுத்தால் போதும். SHARE IT.

Similar News

News August 31, 2025

வளர்ச்சியை பார்த்து EPSக்கு வயிற்றெரிச்சல்: TRP ராஜா

image

CM ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை கடுமையாக விமர்சித்து <<17564189>>EPS அறிக்கை<<>> வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் நிரூபித்து வருவதால், வயிற்றெரிச்சல் கொண்டு EPS பேசி வருவதாக அமைச்சர் TRB ராஜா சாடியுள்ளார். அறிக்கையில் EPS அரைத்த மாவையே அரைத்து, புளிப்பு காமெடி செய்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

News August 31, 2025

வெண்கலப் பதக்கம் வென்ற சாத்விக் சிராக் ஜோடி

image

29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் – சிராக் ஜோடி, சீனாவின் லியு யீ – சென் போயாங் ஜோடியுடன் மோதியது. முதல் செட்டை சீனா வெல்ல, 2-வது செட்டை இந்திய ஜோடி கைப்பற்றியது. வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் 21 – 12 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவி வெண்கலப் பதக்கத்தை பெற்றது.

News August 31, 2025

வரலாற்றில் இன்று (ஆகஸ்ட் 31)

image

*1957 – பிரிட்டிஷ் அரசிடம் இருந்து மலேசியா விடுதலை பெற்றது
*1969 – இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜவகல் ஸ்ரீநாத் பிறந்த நாள்
*1979 – சினிமா இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள்
*1997 – வேல்ஸ் இளவரசி டயானா, பாரிசில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார்.
* 2020 – இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நினைவு தினம்

error: Content is protected !!