News October 23, 2025
DMK ஆட்சியில் அனைவருக்கும் கண்ணீர் பரிசு: RB உதயகுமார்

சிறுவர்கள் பட்டங்களை பறக்கவிடுவது போல CM ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக RB உதயகுமார் சாடியுள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், தற்போதைய ஆட்சியில், அரசு ஊழியர்கள் முதல் விவசாயிகள் வரை அனைவருக்கும் கண்ணீர் மட்டுமே பரிசாக கிடைத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார். புதிய DGP முதல் மதுரை மேயர் வரை யாரையும் தேர்வு செய்ய முடியாமல் தவிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
Similar News
News October 23, 2025
₹100 கோடி கிளப்பில் ‘டியூட்’: ஹாட்ரிக் வெற்றியில் பிரதீப்

சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி என்பது அரிதான ஒன்று. அந்த பட்டியலில் இணைந்துள்ளார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். அவரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘டியூட்’ திரைப்படம், உலக அளவில் ₹100 கோடி வசூலை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கெனவே ‘கோமாளி’ மற்றும் ‘லவ் டுடே’ திரைப்படங்கள் ₹100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், 3-வது முறையாக தொடர்ந்து ‘டியூட்’ திரைப்படமும் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
News October 23, 2025
PM மோடி பங்கேற்காதது ஏன்? மலேசிய PM விளக்கம்

தீபாவளி காரணமாகவே PM மோடி ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மோடியின் முடிவை மதிப்பதாக கூறிய அவர், PM மோடி காணொலி மூலம் கலந்து கொள்வார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, காணொலி மூலம் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ள PM மோடி, ஆசியான் – இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்த எதிர்நோக்கியுள்ளதாக தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
News October 23, 2025
பிறந்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமை… கையை பாருங்க

உ.பி.,யின் நொய்டாவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் பச்சிளம் குழந்தைக்கு கொடுத்த தவறான சிகிச்சையால், கையை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தவறான ஊசி தான் காரணம் என்றும், இதுபற்றி ஹாஸ்பிடலில் கூறியும் கண்டுகொள்ளவில்லை எனவும் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. இதை விசாரிக்க 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. இம்மாதிரியான மருத்துவ தவறுகளை எப்படி தடுப்பது?