News January 2, 2025
அணிகள் இணைப்பு உறுதியாக நடைபெறும்: சசிகலா

2025 ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சென்னையில் செய்தியாளர்களை சசிகலா சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2026 சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்பதுதான் எங்களின் இலக்கு. மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் இருக்கின்றன. எங்களின் இருபெரும் தலைவர்களான MGR, ஜெயலலிதாவிட்டு சென்ற பணியை தொடர்ந்து செய்வோம். இந்த ஆண்டில் அணிகள் இணைப்பு உறுதியாக நடைபெறும்” என்றார்.
Similar News
News October 29, 2025
கரூர் வழக்கை மேற்கோள் காட்டிய ஆம்ஸ்ட்ராங் மனைவி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை CBI-க்கு மாற்றியதை எதிர்த்து, TN அரசு SC-ல் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், புதிய இடையீட்டு மனுவை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, SC-ல் தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை CBI விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். கரூர் துயர வழக்கு போன்று, CBI விசாரணையை கண்காணிக்க Retd நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
News October 29, 2025
இன்று IND vs AUS முதல் டி20 போட்டி

ஆஸி.,வில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இன்று 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை தொடங்குகிறது. முன்னதாக, கில் தலைமையில் விளையாடிய 3 ODI போட்டிகள் கொண்ட தொடரை, 2-1 என்ற கணக்கில் ஆஸி., கைப்பற்றியது. எனவே, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்களது பிளேயிங் 11-ஐ கமெண்ட் பண்ணுங்க.
News October 29, 2025
இந்திரனின் புகழை திருட பாஜக முயற்சிக்கிறது: ஆம் ஆத்மி

தீபாவளியை அடுத்து டெல்லியில் காற்று மாசு அதிகமானது. இதனால் 53 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை மழை பெய்ய வைப்பதற்காக, மேக விதைப்பு நடைபெற்றது. இதனை ‘மிகப்பெரிய மோசடி’ என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது. உண்மையாகவே மழை பெய்தால், அவர்கள் (பாஜக) மழைக் கடவுளான இந்திரனின் புகழை திருடக்கூடும் என்றும் அக்கட்சி கடுமையாக தாக்கியுள்ளது. ஏற்கெனவே சில சமயங்களில் டெல்லியில் செயற்கை மழை பொழிய வைக்கப்பட்டது.


