News January 24, 2025
எமிஸ் தளத்தில் ஆசிரியர்கள் பணிச்சுமை குறைப்பு

எமிஸ் தளத்தில் தரவுகளை பதிவேற்றம் செய்ய செலவிடும் நேரத்தால் மாணவர்களுக்கு பாடம் கற்பித்தலில் கவனம் செலுத்த முடிவதில்லை என ஆசிரியர்கள் வேதனை தெரிவித்திருந்தனர். இதையடுத்து அவர்களது சுமையை பள்ளிக்கல்வித் துறை குறைத்துள்ளது. பயிற்சி வருகை, கருத்து, விநாடி வினா தரவுகள், அடல் ஆய்வகம் தொகுதி நீக்கப்படுவதாகவும், 15 நாளுக்கு மேல் வராத மாணவர் தரவை மட்டும் பதிவேற்றினால் போதும் எனத் தெரிவித்துள்ளது.
Similar News
News December 17, 2025
₹50,000 உதவித்தொகை.. மாணவர்களுக்கு ஜாக்பாட்

தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் காலத்திலேயே ₹50,000 உதவித்தொகை (ஒருமுறை மட்டும்) TN அரசால் வழங்கப்படுகிறது. இதற்கு Post Matric Scholarship & 7.5% சிறப்பு ஒதுக்கீட்டின் வழியும் உதவித்தொகை பெறவில்லை என்பதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும். ₹72,000 தொகைக்கு மிகாமல் ஆண்டு வருமானம் இருத்தல் வேண்டும். தகுதியுள்ள மாணவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE IT.
News December 17, 2025
2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் வளர்ச்சி: தங்கம் தென்னரசு

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 16% (₹31.19 லட்சம் கோடியாக) அதிகரித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாகவே தமிழகம் தொடர்ந்து வளர்ச்சியில் சாதனை படைத்து வருவதாக குறிப்பிட்ட அவர், உற்பத்தித்துறை, கட்டுமானத்துறை, மின்னணு துறையில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என்றார். ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை 2030-ம் ஆண்டு எட்டுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
News December 17, 2025
பிரபல நடிகர் கேன்சரால் காலமானார்

கேன்சர் என்ற கொடிய நோய்க்கு ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு தெரியாது என்பார்களே அது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் கில் ஜெரார்ட்(82) கேன்சர் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்ததாக அவரது மனைவி ஜேனட் அறிவித்துள்ளார். ‘ஸ்டார் வார்ஸ்’, ‘ஏர்போர்ட் 77’ உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய ரசிகர்களின் மனங்களை கவர்ந்த அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP


