News July 24, 2024
மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஆசிரியர்கள்?

தினமும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விவரங்களை பள்ளிக் கல்வி செயலியில் ஆசிரியர்கள் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிருப்தி அடைந்துள்ள ஆசிரியர்கள், கல்வி சாராத பணிகள் அதிக அழுத்தத்தை தருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். முன்னதாக, ஆசிரியர்களை கற்பித்தல் தவிர வேறு எந்த பணிகளிலும் ஈடுபடுத்துவது மாணவர்களின் நலனை பாதிக்கும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
Similar News
News March 3, 2026
10-வது பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

வரும் மார்ச் 11-ம் தேதி தொடங்க உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை TN அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் விண்ணப்ப எண் & பிறந்த தேதியை பயன்படுத்தி <
News March 3, 2026
L வடிவ பாலத்தில் 4 பெரும் குறைபாடுகள்: அன்புமணி

சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம் தரமற்றது என்பதை உறுதிபடுத்தும் விதமாக வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ள<<19180715>> 4 காரணங்களை அன்புமணி அடுக்கியுள்ளார்.<<>> வலுவற்ற இரும்பு கம்பிகள், தரமற்ற சிமெண்ட், சீராக பரப்பப்படாத கான்க்ரீட் கலவை & ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கும் தூண்கள் என கூறியுள்ளார். பாலம் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து உயர்நிலை விசாரணைக்கு TN அரசு உத்தரவிடவும் வலியுறுத்தியுள்ளார்.
News March 3, 2026
திமுகவுடன் கூட்டணி.. வெளிப்படையாக அறிவித்தார்

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாள்களாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து பேசிய செல்வப்பெருந்தகை, திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக விளக்கம் அளித்தார். தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் திமுக கெடு விதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


