News February 28, 2025
இந்தியா வளர கருத்து சொன்ன டீச்சர் சஸ்பெண்ட்

தோனிக்கு பின் தமிழகத்தில் பிரபலமாகப் போகும் 2வது பிஹார்காரன் நானாக தான் இருக்கமுடியும் என தவெக ஆண்டுவிழாவில் பிரசாந்த் கிஷோர் பெருமையாகப் பேசியிருந்தார். ஆனால், அங்கு பணி ஒதுக்கப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை தீபாலி, பிஹாரை இந்தியாவில் இருந்து நீக்கிவிட்டால் வளர்ந்த நாடாகிவிடும் எனப் பேசி அந்த பெருமையை சுக்குநூறாக்கி விட்டார். விளைவு வேலையில் இருந்து சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.
Similar News
News February 28, 2025
வெதர்மேன் இல்லை; இனி வெதர்வுமன்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவராக முதல் முறையாக பெண் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். 2016ல் இந்த பொறுப்புக்கு வந்த பாலச்சந்திரன் ஓய்வு பெறுவதால் அந்த பதவிக்கு அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1991ல் வானிலை ஆய்வு மையத்தில் பணிக்கு சேர்ந்த இவர், பருவமழையின் தரவுகளை ஆராய்ந்து பி.ஹெச்டி பட்டம் பெற்றிருக்கிறார்.
News February 28, 2025
காவல் ஆய்வாளருக்கு வாரண்ட்.. சீமான் வழக்கில் திடீர் திருப்பம்

சீமான் வீட்டில் நேற்று சம்மன் அளிக்க சென்றபோது ஏற்பட்ட மோதலில் இருவரை கைது செய்த காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு வேறொரு வழக்கில் தாம்பரம் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 2019இல் வழக்கறிஞர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சீமான் மீதான பாலியல் வழக்கில் அவர் இன்று ஆஜராக உள்ள நிலையில், இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News February 28, 2025
IND உடன் மோதும் அணிகளுக்கு தான் அழுத்தம்: SA வீரர்

CTயில் IND உடன் செமி ஃபைனல், ஃபைனல் மோத உள்ள அணிகளுக்கு அதிக அழுத்தம் இருக்கும் என SA வீரர் ரஸ்ஸி வான்டெர் டூசன் தெரிவித்துள்ளார். ஒரே இடத்தில் பயிற்சி செய்து, விளையாடுவது INDக்கு மிக சாதகமான ஒன்று எனவும், இதனால் அந்த மைதானத்தை அணியால் முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதை புரிந்து கொள்வதற்கு ராக்கெட் டெக்னாலஜி அறிவு தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.