News April 1, 2025
மாணவனின் தந்தைக்கு காம வலைவீசி, மிரட்டிய டீச்சர்!

பெங்களூருவில் காம வலை வீசி பணம் பறித்த டீச்சர் கைதாகியுள்ளார். மகனின் பள்ளி சேர்க்கைக்காக சென்றவருடன், டீச்சர் ஸ்ரீதேவி ருடகி நெருங்கி பழகியுள்ளார். இருவரும் தகாத உறவில் இருந்த நிலையில், ஸ்ரீதேவி அதனை வீடியோ எடுத்து பணம் பறித்துள்ளார். ரூ.4 லட்சத்தை மிரட்டி பறித்த நிலையில், மேலும் ரூ.20 லட்சம் கேட்டதால் அவர் போலீசை நாடினார். இதன்பின், டீச்சர், அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேர் கைதாகியுள்ளனர்.
Similar News
News November 24, 2025
ராணிப்பேட்டை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News November 24, 2025
₹20 கோடிக்கு ஏலம் போன டைட்டானிக் காதல் வாட்ச்!

1912-ல் டைட்டானிக் கப்பலில் பலியான தொழிலதிபர் இசிடோர் ஸ்ட்ராஸ்க்கு சொந்தமான தங்க பாக்கெட் வாட்ச், ஏலத்தில் சுமார் ₹20 கோடிக்கு விற்று சாதனை படைத்துள்ளது. கப்பல் மூழ்கும் போது, ஸ்ட்ராஸ் மற்றும் அவரது மனைவி ஐடா ஒருவரையொருவர் பிரிய மறுத்து உயிரிழந்த காதல் ஜோடி. அவர்களது காதல் சின்னமாக விளங்கிய இந்த வாட்ச், தற்போது டைட்டானிக் நினைவு பொருள்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
News November 24, 2025
தற்குறி Vs ஆச்சரியக்குறி: அமைச்சர் ரகுபதி புது விளக்கம்

தவெக தொண்டர்கள் <<18366063>>தற்குறி<<>> அல்ல, ஆச்சரியக்குறி என விஜய் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ரகுபதி, விஜய் ஆச்சரியக்குறியோ, தற்குறியோ எப்படி இருந்தாலும் கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் இலக்கு தேர்தல் குறிதான் என்றும் அவர் கூறியுள்ளார். யாரை கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை என்றும், யாரோடும் எங்களுக்கு பகை இல்லை எனவும் ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.


