News April 23, 2025
தோப்புக்கரணம் போட சொன்ன டீச்சருக்கு ₹2 லட்சம் அபராதம்

சிவகங்கையில் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த மாணவியை, தோப்புக்கரணம் இட வைத்த ஆசிரியைக்கு அபராதம் விதித்திருக்கிறது மாநில மனித உரிமை ஆணையம். 7-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 400 தோப்புக்கரணம் போட வைத்திருக்கிறார் அரசுப்பள்ளி ஆசிரியை சித்ரா. இதனால் மாணவிக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆசிரியையிடமிருந்து அபராதமாக ₹2 லட்சத்தை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News April 24, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News April 24, 2025
இஷான் கிஷன் மீது ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு

MI-க்கு எதிரான போட்டியில் SRH வீரர் இஷான் கிஷன் 1 ரன்னில் அவுட் ஆனதை தொடர்ந்து, சோஷியல் மீடியாவில் ‘#FIXING’ ட்ரெண்டாகி வருகிறது. அவுட் ஆகாமலே எந்தவித சந்தேகத்தையும், ரிவிவ்யூவையும் கேட்காமலும், அம்பயர் அவுட் கொடுக்காத நிலையிலும் அவர் வெளியேறியதால், நெட்டிசன்கள் சந்தேகத்தை எழுப்பி இவ்வாறு கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், BCCI கிஷனை ஒப்பந்தத்தில் எடுத்ததையும் விமர்சித்து வருகின்றனர்.
News April 24, 2025
பாக். தளபதியின் பேச்சுதான் தாக்குதலுக்கு காரணமா?

காஷ்மீர் சகோதரர்களை பாக். ஒருபோதும் கைவிடாது என அந்நாட்டின் ராணுவ தளபதி அசிம் முனீர் சமீபத்தில் பேசியிருந்தார். மேலும், இந்துக்களில் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள் எனவும் அவர் கூறியிருந்தார். இவ்வாறு அவர் பேசிய அடுத்த சில நாள்களில் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாக். ராணுவ தளபதியே தீவிரவாதிகளை உசுப்பிவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.