News April 23, 2025
தோப்புக்கரணம் போட சொன்ன டீச்சருக்கு ₹2 லட்சம் அபராதம்

சிவகங்கையில் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த மாணவியை, தோப்புக்கரணம் இட வைத்த ஆசிரியைக்கு அபராதம் விதித்திருக்கிறது மாநில மனித உரிமை ஆணையம். 7-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 400 தோப்புக்கரணம் போட வைத்திருக்கிறார் அரசுப்பள்ளி ஆசிரியை சித்ரா. இதனால் மாணவிக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆசிரியையிடமிருந்து அபராதமாக ₹2 லட்சத்தை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News November 1, 2025
Gen Z தலைமுறையினர் இந்தியாவின் வளம்: கர்னல்

Gen Z தலைமுறையினர் இந்தியாவின் வளம் என்று கர்னல் ஷோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார். நாட்டின் மக்கள்தொகையில் 65%-க்கும் அதிகமானோர் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற அவர், இவர்களில் பெரும்பாலானோர் Gen Z தலைமுறையை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இவர்கள் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறியுள்ளார். Gen Z தலைமுறை குறித்த கர்னலின் பேச்சு பேசுபொருளாகியுள்ளது.
News November 1, 2025
தாமஸ் ஆல்வா எடிசன் பொன்மொழிகள்

*உங்கள் ஆழ்மனதுக்கு ஒரு கோரிக்கை விடுக்காமல், ஒருபோதும் தூங்கச் செல்லாதீர்கள்.
*தைரியமாக இருங்கள், நம்பிக்கை வைத்திருங்கள், முன்னோக்கிச் செல்லுங்கள்.
*இங்கே எல்லாவற்றிற்கும் ஒரு சிறந்த வழி உள்ளது, அதை கண்டுபிடியுங்கள்.
*வெற்றியின் ரகசியம் குறிக்கோளில் கவனம் செலுத்தலாகும்.
*ஒரு ஆணின் சிறந்த நண்பர், ஒரு நல்ல மனைவி. 
News November 1, 2025
FI பட ரீமேக் சாத்தியமா? அஜித் கொடுத்த அப்டேட்

ஜனவரியில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும் என்று அஜித் கூறிவிட்டார். அதேநேரம், ‘F1’ பட ரீமேக் குறித்தும் அவர் பேசியுள்ளார். ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இதனை ரீமேக் செய்வதன் மூலம் F1 ரேஸிங்கை பிரபலப்படுத்த முயன்றால், அதுவே தனக்கு மகிழ்ச்சி என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனால் ‘தல கண்டிப்பா F1 ரீமேக் பண்ணுங்க’ என்று அஜித் ரசிகர்கள் கோரி வருகின்றனர்.


