News November 20, 2024
ஆசிரியை படுகொலை: இபிஎஸ் ஆவேசம்

தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஆசிரியை ரமணி (26) கொலை செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக கூறிய அவர், தமிழகத்தில் அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக விமர்சித்தார். மேலும், சட்டம் ஒழுங்கை காப்பதில் முதல்வர் கவனம் செலுத்தும்படியும் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 10, 2025
விஜய்யின் அடுத்தக்கட்ட மூவ்

தவெக மாநில நிர்வாகிகள் & மாவட்ட செயலாளர்களுடன் விஜய் நாளை அவசர ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். பனையூர் கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், அடுத்தக்கட்ட சுற்றுப்பயணங்கள், தேர்தல் பிரசாரம், SIR, பூத் கமிட்டி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் விஜய்யின் அடுத்த சுற்றுப்பயணங்கள் எங்கே என்பது குறித்த தகவல் வெளியாகலாம்.
News December 10, 2025
திமுகவின் புதிய பரப்புரை இன்று தொடக்கம்..

2026 தேர்தலுக்கான பரப்புரையை பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ பரப்புரையை தமிழகம் முழுவதும் திமுக இன்று தொடங்குகிறது. தேனாம்பேட்டையில் நடைபெறும் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பரப்புரை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கிறார். அதேபோல், அமைச்சர்கள் அந்தந்த பகுதிகளில் பங்கேற்கின்றனர்.
News December 10, 2025
12th பாஸ் போதும், 2757 காலியிடங்கள்: முந்துங்க

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 2757 Apprentices காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளம்: ₹25,000 – ₹30,000. கல்வித் தகுதி: 12th, Diploma, Degree. வயது வரம்பு: 18 – 24 வரை. தேர்வு செய்யும் முறை: Merit List, Certificate Verification. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.18-ம் தேதி. உடனே விண்ணப்பிக்க இங்கே <


