News February 28, 2025
ஏர்போர்ட்டில் இனி டீ ₹10

கொல்கத்தாவை தொடர்ந்து சென்னை ஏர்போர்ட்டிலும் `உடான் யாத்ரீ கஃபே’ என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை மத்திய அமைச்சர் ராம் மோகன் திறந்து வைத்தார். ஏர்போர்ட்டில் ஒரு டீ, காபி குடிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ₹100 வரை செலவழிக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், இனி அவ்வளவு பணம் எல்லாம் செலவு செய்ய வேண்டாம். டீ ₹10, காபி ₹20, தண்ணீர் பாட்டில் ₹10, சமோசா ₹20, வடை ₹20க்கு வாங்க முடியும்.
Similar News
News February 28, 2025
விண்வெளிக்கு செல்லும் அமெரிக்க பாடகி

ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் NS-31 திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி விண்வெளிக்கு செல்ல உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் மனைவி உள்பட மொத்தம் 3 பேர் விண்வெளிக்கு பயணிக்க உள்ளனர். 1969க்கு பின், முழுக்க பெண்களே செல்லும் முதல் வரலாற்று பயணமாக இது அமைய உள்ளது. இந்த பயணம் பெண்களுக்கு உந்துசக்தியாக அமையும் என கேட்டி பெர்ரி தெரிவித்துள்ளார்.
News February 28, 2025
பஸ்ஸில் பலாத்காரம்.. கொடூரன் கைது

மஹாராஷ்டிராவில் 26 வயது இளம்பெண்ணை பஸ்ஸில் ரேப் செய்த கொடூரன் தாத்தரேயா ராமதாஸ், 2 நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளான். 13 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவில் அவனை போலீசார் கைது செய்தனர். இவன் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜாமினில் வெளிவந்து இந்த கொடூரத்தை செய்துள்ளான். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
News February 28, 2025
ரயில்வேயில் 32,438 காலியிடங்கள்: நாளை கடைசி

ரயில்வேயில் 32,438 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே (மார்ச்.1) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயதாக 18ம், அதிகபட்ச வயதாக 36ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேலையில் சேர விரும்புவோர், ரயில்வே ஆள்தேர்வு இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்கவும். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்க.