News February 28, 2025
ஏர்போர்ட்டில் இனி டீ ₹10

கொல்கத்தாவை தொடர்ந்து சென்னை ஏர்போர்ட்டிலும் `உடான் யாத்ரீ கஃபே’ என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை மத்திய அமைச்சர் ராம் மோகன் திறந்து வைத்தார். ஏர்போர்ட்டில் ஒரு டீ, காபி குடிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ₹100 வரை செலவழிக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், இனி அவ்வளவு பணம் எல்லாம் செலவு செய்ய வேண்டாம். டீ ₹10, காபி ₹20, தண்ணீர் பாட்டில் ₹10, சமோசா ₹20, வடை ₹20க்கு வாங்க முடியும்.
Similar News
News February 28, 2025
வெயிலில் கிச்சன் உஷ்ணம் இன்றி இருக்க.. சூப்பர் டிப்ஸ்!!

கோடை காலத்தில் கிச்சனில் சமைக்கும் போது, உடலின் உஷ்ணத்தை குறைக்க சூப்பர் டிப்ஸ்: வீட்டில் சமையலை ஒரு வேளையாக குறைக்கலாம் * சீக்கிரமாக தயாராகும் உணவுகளைத் தேர்ந்தெடுங்கள் *ஜன்னலை திறந்து வையுங்கள். Exhaust ஃபேனை பயன்படுத்துங்கள் *சிறிய பாத்திரங்கள் பயன்படுத்துங்கள். அவை, விரைவாக சூடாகி சமையல் வேகமாக முடியும் *உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள அடிக்கடி தண்ணீர், பழச்சாறுகளை பருகுங்கள்.
News February 28, 2025
வெதர்மேன் இல்லை; இனி வெதர்வுமன்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவராக முதல் முறையாக பெண் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். 2016ல் இந்த பொறுப்புக்கு வந்த பாலச்சந்திரன் ஓய்வு பெறுவதால் அந்த பதவிக்கு அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1991ல் வானிலை ஆய்வு மையத்தில் பணிக்கு சேர்ந்த இவர், பருவமழையின் தரவுகளை ஆராய்ந்து பி.ஹெச்டி பட்டம் பெற்றிருக்கிறார்.
News February 28, 2025
காவல் ஆய்வாளருக்கு வாரண்ட்.. சீமான் வழக்கில் திடீர் திருப்பம்

சீமான் வீட்டில் நேற்று சம்மன் அளிக்க சென்றபோது ஏற்பட்ட மோதலில் இருவரை கைது செய்த காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு வேறொரு வழக்கில் தாம்பரம் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 2019இல் வழக்கறிஞர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சீமான் மீதான பாலியல் வழக்கில் அவர் இன்று ஆஜராக உள்ள நிலையில், இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.