News September 20, 2024
மீண்டும் நம்பர் 1 இடத்தில் TCS..!

உலக அளவில் TCS நிறுவனத்திற்கு என்று ஒரு தனிப் பெயரும், மரியாதையும் உண்டு. பணிநீக்கம் போன்ற நடவடிக்கைகளில் TCS ஈடுபட்டதில்லை என்பதும் இதற்கு காரணம். இந்நிலையில், Kantar Brandz வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவிலேயே அதிக பண மதிப்புக் கொண்ட நிறுவனங்களின் (Most Valued Brand) பட்டியலில் 49 பில்லியன் டாலர்களுடன் TCS முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்த இடத்தை TCS தக்க வைத்துள்ளது.
Similar News
News August 20, 2025
தனித்துவமான படம் காஞ்சனா 4: பாகுபலி நடிகை பேட்டி

பாகுபலி படத்தின் ‘மனோகரி’ பாடலில் வரும் நடிகை நோரா ஃபடேஹி, ‘காஞ்சனா 4’ மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இதுதொடர்பாக சமீபத்தில் பேசிய அவர், இப்படம் தனித்துவமான கதையம்சம் கொண்டதாக தெரிவித்துள்ளார். தமிழில் பேசுவதற்கு அதிகமாக சிரமப்பட்டதாகவும், படக்குழுவினர் தனது மொழி உச்சரிப்புக்கு உதவியதாகவும் கூறியுள்ளார். காஞ்சனா படத்தின் முந்தைய பாகங்கள் ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
News August 20, 2025
திமுகவுக்கு வலிமை கிடையாது: விஜயபாஸ்கர் விமர்சனம்

திமுகவுக்கு தனித்து எந்த வலிமையும் இல்லை; கூட்டணி கட்சிகளால்தான் பலமாக இருப்பதாக EX மினிஸ்டர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார். MGR, ஜெ.,வுக்கு பிறகு அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை EPS வலிமையுடன் வழிநடத்தி வருகிறார் எனக் கூறிய அவர், தற்போது DMK அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். இதனால், 2026-ல் கட்டாயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்; ADMK கூடுதல் பலத்துடன் களத்தில் நின்று வெற்றிபெறும் என தெரிவித்தார்.
News August 20, 2025
ஜெய்ஸ்வால் Vs சுப்மன் கில் : யார் சிறந்த டி20 வீரர்

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான ஜெய்ஸ்வாலை ஆசிய கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 23 டி20 போட்டிகளில் 164 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 5 அரைசதம், 1 சதம் உட்பட 723 ரன் அடித்துள்ளார். சுப்மன் கில் 21 போட்டிகளில் 139 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 3 அரைசதம், 1 சதம் உட்பட 578 ரன் அடித்துள்ளார். ஜெய்ஸ்வாலை விட குறைவான ஸ்ட்ரைக் ரேட் கொண்ட கில் எப்படி தேர்வானார் ?