News August 27, 2025

Tax Vs Tariff.. என்ன வித்தியாசம்?

image

USA-ன் வரிவிதிப்பு தொடர்பான செய்திகளில் ‘Tariff’ என்ற வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்போம். இந்நிலையில், இதற்கும் Tax-க்கும் என்ன வித்தியாசம் என்று தற்போது பார்க்கலாம். Tax என்பது அரசுக்கு வரி செலுத்துவோர் மீது விதிக்கப்படும் கட்டணம் ஆகும். இது நேரடி வரி, மறைமுக வரி என இரு வகைப்படும். Tariff என்பது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் ஆகும்.

Similar News

News March 8, 2026

அரசியலில் விசுவாசம் குறைந்துவிட்டது: நேரு

image

அரசியலில் இப்போது விசுவாசம் குறைந்துவிட்டதாக அமைச்சர் KN.நேரு கூறியுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது. தஞ்சாவூரில், முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி நினைவு மண்டப திறப்பு விழாவில் பேசிய அவர், அந்த கால அரசியல்வாதிகள் முன்பு உள்ளதை நினைத்து பார்க்கக் கூடியவர்கள் என்றார். அண்மை காலமாக பலர் திமுகவில் இணைவதை விரும்பாத நேரு, விசுவாசம் குறித்து பேசினாரா? என SM-ல் விவாதம் எழுந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?

News March 8, 2026

மகளிர் தினம்: பெண்களுக்கு ₹2,500…

image

ஓட்டுக்காக மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதை திரைப்படங்களில் எதிர்த்த விஜய், அரசியலுக்கு வந்தவுடன் அதே இலவசங்களை தானும் கையில் எடுத்துள்ளார். இரு திராவிட கட்சிகளும் பெண் வாக்காளர்களை கவர, மகளிருக்கு ₹2,000 வழங்கப்படும் என அறிவித்ததோ, அதை மிஞ்சும் வகையில் ₹2,500 வழங்கப்படும் என்று விஜய் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கு ஒருதரப்பு வரவேற்பும், மற்றொரு தரப்பு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

News March 8, 2026

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக வழிபாடுகள்!

image

*சாஸ்திரப்படி வீட்டில் எலுமிச்சை தீபம் ஏற்றக்கூடாது. கோயில்களிலேயே ஏற்ற வேண்டும் *கோயிலில் சனி சன்னிதியிலோ அல்லது நவகிரக சன்னிதியிலோ மட்டுமே எள் தீபம் ஏற்றவேண்டும். *சனீஸ்வரன், நடராஜர், கோப ரூபத்தில் இருக்கும் காளி ஆகியோரின் உருவப் படங்களை வீட்டில் வைத்திருக்ககூடாது *செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கை தேய்க்கக் கூடாது *கற்பூரத்தை ஏற்றி வழிபட்ட பிறகு, அதை ஊதி அணைக்கக்கூடாது.

error: Content is protected !!