News June 19, 2024
வரி ரீபண்ட்: வருமான வரித்துறை முக்கிய அறிவிப்பு

வங்கிக் கணக்கை சரிபார்க்காமல் வருமானவரி அறிக்கை தாக்கல் செய்தால், வரி ரீபண்ட் கிடைக்காது என மத்திய வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான X பதிவில், “வங்கிக் கணக்கை வேலிடேட் செய்தவுடன் மீண்டும் ஒருமுறை டாக்ஸ் ரீபண்ட் பெற, Refund Reissue Request கோர வேண்டும். அதன்பிறகு, Validation செய்து முடித்த உடன், மீண்டும் ரீபண்ட் கோர வேண்டும்” என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 30, 2026
ரயில்களில் சர்ச்சை விளம்பரங்களுக்கு தடை

புகைப்பிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விளம்பரங்களை ரயில்களில் ஒட்டுவதற்கு ரயில்வே தடை விதித்துள்ளது. இனி ரயில் நிலையங்கள், ரயில்களில் விளம்பரங்கள் ஒட்டுவது தொடர்பாக உரிய நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, ரயில் விபத்துகளுக்கு காப்பீட்டு திட்டங்களை வழங்கும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் விளம்பரங்கள் ஏற்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.
News March 30, 2026
விஜய்க்கு தோல்வி பயம்: அமைச்சர் ரகுபதி

தேர்தலில் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகமும் பயமும் விஜய்க்கு இருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஒரு தொகுதியில் போட்டியிட்டு, அங்கு தோற்றுவிட்டால் என்ன செய்வது என்ற பயத்திலேயே, 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார் எனவும் அவர் விமர்சித்தார். மேலும், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் விஜய் தோல்வியை தழுவுவார் என்றும் அவர் கூறினார். <<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
தாயுமானவர் பொன்மொழிகள்!

*நல்லெண்ணம் வளர வளர அது நமது உடலில் ஊறியதாக ஆகிவிடுகிறது. பிறகு கெட்ட எண்ணம் என்பதே வருவதில்லை. இது எல்லாவற்றிற்கும் அடிப்படை பழக்கமே *ஒழுக்கத்தில் நிலைநின்றவர்களுக்கு மன உறுதி அதிகரிக்கிறது. பின்னர் அதுவே ஆத்ம சக்தியாக வடிவம் எடுக்கிறது *நல்ல மனதுக்கு உலகம் நல்லதாகவும், கெட்ட மனதுக்கு உலகம் கெட்டதாகவும் தென்படுகிறது *நல்ல எண்ணம் நமக்கு நல்ல நலம் தந்து, வாழ்வினை வளமடையச் செய்கிறது


