News September 4, 2025
டிராக்டர், டயர்களுக்கு இனி வரி 5% மட்டுமே

விவசாயத் துறையிலும் பல்வேறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. டிராக்டர் டயர்கள் & பாகங்கள், டிராக்டர்கள், குறிப்பான உயிர் உரங்கள், நுண்சத்துகள், சொட்டுநீர் அமைப்பு & தெளிப்பான்கள், மண்ணை பதப்படுத்தும் வேளாண் & தோட்ட உபகரணங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களுக்கு ஜிஎஸ்டி வரி 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 18, 2026
ஓபிஎஸ், சசிகலாவை விமர்சித்த புகழேந்தி

முதலமைச்சர் பதவி கொடுத்த சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஏன் EPS-யிடம் தைரியமான கேள்வி கேட்காமல் ஒதுங்கி செல்கின்றனர் என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி புகழேந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ஓசூரில் பேசிய அவர், தனது நிலைப்பாடு குறித்து 10 நாட்களில் அறிவிப்பேன் என்று தெரிவித்தார். மேலும், அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை யார் கொண்டாடுகிறார்களோ அவர்களை கொண்டாடுவோம் என்று கூறினார்.
News January 18, 2026
வம்பிழுத்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சூரி

மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் நடிகர் சூரி, DCM உதயநிதிக்கு காளை சிலையை நினைவு பரிசாக வழங்கினார். இதற்கு நெட்டிசன் ஒருவர், சூரியை திமுகவுடன் இணைத்து, ‘இனி சூரியும் ₹200 கொத்தடிமை. தவெகவை மீறி அடுத்த படம் எப்படி ரிலீஸ் செய்யப்போகிறாரோ?’ என்ற கேலி செய்தார். இதற்கு சூரி, ‘இங்கு கதை தான் கிங், அது நன்றாக இருந்தால் வெற்றி தான்’ என்று பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
News January 18, 2026
சொந்த மண்ணில் தொடரை வெல்லுமா இந்திய அணி?

இந்தியா – நியூசிலாந்து இடையேயான கடைசி மற்றும் 3-வது ODI போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. நியூசிலாந்து எதிராக ODI தொடரில் இதுவரை சொந்த மண்ணில் இந்திய அணி தோற்றதே இல்லை. அதேபோல், இந்தூர் மைதானத்தில் ODI போட்டியில் தோல்வியை சந்தித்தது கிடையாது. 1-1 என சமனில் உள்ள நிலையில், தொடரை இந்திய அணி என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.


