News March 25, 2025

₹2,300 கோடி மதிப்பிலான 55 பொருள்களுக்கு வரி குறைப்பு?

image

₹2,300 கோடி மதிப்பிலான 55 USA இறக்குமதி பொருள்களுக்கான வரியை குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப் அறிவிப்பின்படி, ஏப்ரல் 2 முதல் அமலுக்கு வரும் புதிய USA வரி விதிப்பு முறையால், ₹6,600 கோடி அளவுக்கு இந்திய இறக்குமதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இரு நாட்டு வர்த்தகத்தை சுமூகமாக பேண, இந்த வரி குறைப்பை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Similar News

News March 28, 2025

தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம்

image

தவெகவின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுவதையொட்டி, அக்கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர். காலை 9 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில், விஜய் பங்கேற்கிறார். இதில், மத்திய – மாநில அரசுகளை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. தேர்தல் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கும் விஜய், சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளதாக தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

News March 28, 2025

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

image

ஜம்மு – காஷ்மீரில் என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கதுவா மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் 5 பேர் ஊடுருவியதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில், 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 3 பாதுகாப்புப் படையினர் வீர மரணம் அடைந்தனர். காயமடைந்த 5 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News March 28, 2025

வசூலில் புதிய உச்சம் தொட்ட L2: எம்புரான்!

image

மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கிய, ‘L 2: எம்புரான்’, நாடு முழுவதும் முதல் நாளில் ₹ 21 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் மூலம், முதல் நாளில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற சாதனையை எம்புரான் படைத்துள்ளது. முன்னதாக, இச்சாதனையை பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ (₹ 8.95cr) பெற்றிருந்தது. நீங்க படம் பாத்துட்டீங்களா.. படம் எப்படி இருக்கு?

error: Content is protected !!