News October 10, 2024
சினிமாவில் தோற்ற டாடா

Automobile முதல் IT வரை பலதுறைகளில் சாதனைகள் படைத்த டாடா தோற்றது ஒரே துறை சினிமா தான். 2004-ல் டாடா BSS என்ற நிறுவன பெயரில் ஜதின் குமார் என்பவருடன் இணைந்து ஏத்பார் (Aetbaar) என்ற இந்தி படத்தை தயாரித்தார். அமிதாப், ஜான் ஆப்ரஹாம், பிபாஷா என நட்சத்திரங்கள் நடித்திருந்தும், ரூ.9.5 கோடி பட்ஜெட்டில் தயாரான அந்த படம் 8 கோடி மட்டுமே வசூலித்தது. அதன்பின் படம் தயாரிப்பதை டாடா நிறுத்திக் கொண்டார்.
Similar News
News August 12, 2025
ராசி பலன்கள் (12.08.2025)

➤ மேஷம் – நலம் ➤ ரிஷபம் – லாபம் ➤ மிதுனம் – பொறுமை ➤ கடகம் – போட்டி ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – ஆதரவு ➤ துலாம் – சாந்தம் ➤ விருச்சிகம் – கவனம் ➤ தனுசு – உதவி ➤ மகரம் – தேர்ச்சி ➤ கும்பம் – புகழ் ➤ மீனம் – நற்செயல்.
News August 11, 2025
தூங்கும்போது உங்கள் கை, கால்கள் மரத்துப் போகிறதா?

தூங்கும் போது கை, கால்கள் மரத்துப் போகும் பிரச்னை பலருக்கு இருக்கலாம். விரல்கள், மணிக்கட்டு, முழங்கை பகுதிகளிலோ, கால்கள், சியாட்டிக் நரம்பு பகுதியிலோ அழுத்தம் அதிகமாகையில் அப்பகுதிகள் மரத்துப் போகும். ரத்தவோட்டம் தடைபடுவது மட்டுமல்லாமல், வைட்டமின் பி12, பி6, மக்னீசியம் சத்துகள் குறைவு கூட இதற்கு காரணமாகலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். தினசரி உடற்பயிற்சி, சரிவிகித உணவு இதற்கு சிறந்த தீர்வாகும்.
News August 11, 2025
வீடு தேடி வரும் ரேஷன்.. தாயுமானவர் திட்டம் தொடக்கம்

தமிழ்நாட்டில் உள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தை CM ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சோதனை அடிப்படையில் 10 மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்த இந்த திட்டம் நாளை முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது. இதன்மூலம், மூத்த குடிமக்கள் 15.81 லட்சம், மாற்றுத் திறனாளிகள் 20.42 பேர் பயனடைய உள்ளனர்.