News October 22, 2025
ரெட்ரோ காரை விற்பனைக்கு கொண்டு வரும் டாடா

1990-ல் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்த Tata Sierra கார் மாடலை, அந்நிறுவனம் அடுத்த மாதம் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. பழைய ரெட்ரோ ஸ்டைலை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைத்து அறிமுகப்படுத்த உள்ளது. முதலில் எரிபொருளில் இயங்கும் மாடலையும், அடுத்ததாக EV மாடலையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டாடா நிறுவனத்தின் முதல் 3 ஸ்கிரீன் கொண்ட காராகவும் இது இருக்கும்.
Similar News
News October 23, 2025
SPORTS ROUNDUP: ஜப்பான் ஓபன் காலிறுதியில் கரோலினா

*புரோ கபடி லீக்: நடப்பு தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் அணியாக வெளியேறியது
*பிரான்ஸ் ஓபன்: இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி முதல் சுற்றில் ஜப்பான் வீரரிடம் தோல்வி
*ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கரோலினா முசோவா
*தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: 3ம் நாள் முடிவில் 23 ரன் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் *பிரான்ஸ் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாத்விக் -சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி
News October 23, 2025
சிரஞ்சீவியின் புகைப்படங்களை பயன்படுத்த தடை

பலர் தனது பெயர், போட்டோஸ் அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்துவதாக கூறி ஹைதராபாத் கோர்ட்டை நடிகர் சிரஞ்சீவி நாடியிருந்தார். மேலும் மீம்ஸ் மூலம் தனது பெயரை களங்கப்படுத்தும் செயல்கள் நடப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் சிரஞ்சீவியின் ஒப்புதல் இன்றி, அவரது போட்டோஸ், பெயர்., குரல் ஆகிய பயன்படுத்த தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News October 23, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 23, ஐப்பசி 6 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்:10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவிதியை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை