News November 18, 2024
டாடா ஸ்டீல் செஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்

டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன் தொடரில் நார்வே வீரர் கார்ல்சன் பட்டம் வென்றார். மே.வங்கத்தில் நடந்த இந்த தொடரில், பிளிட்ஸ் பிரிவு 18 சுற்றுகளாக நடந்தது. இதில் 9 வெற்றி, 8 டிரா, ஒரு தோல்வி என 13 புள்ளிகளுடன் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பு ஆண்டில் அவர் வென்ற 10-வது பட்டம் இதுவாகும். ஏற்கெனவே இந்தத் தொடரின் ரேபிட் பிரிவிலும் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
Similar News
News April 4, 2026
நான் முதல்வரானால் இதை செய்வேன்: கீர்த்தி ஷெட்டி

நேரடி அரசியலில் இல்லாத சாதரண மக்களுக்கும், நாம் CM ஆகினால் இதை மாற்ற வேண்டும் என்ற கனவு இருக்கும். அப்படி நீங்கள் முதல்வரானால் முதலில் எந்த விஷயத்திற்கு கையொப்பமிடுவீர்கள் என நடிகை கீர்த்தி ஷெட்டியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘நம் நாட்டில் பாலியல் குற்றங்களுக்கு போதுமான தண்டனைகள் இல்லை; ஆகவே தண்டனைகளை கடுமையாக்குவதற்கு கையெழுத்திடுவேன்’ என்றார்.
News April 4, 2026
அதிருப்தியில் அதிமுகவிற்கு தாவிய தவெக நிர்வாகி

கரூர் துயர வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி அதிமுகவில் இணைந்திருப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தவெகவின் கரூர் மாநகரச் செயலாளர் பவுன்ராஜ், முன்னாள் அமைச்சர் MR விஜயபாஸ்கர் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால் பவுன்ராஜ் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News April 4, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

தேர்தலையொட்டி புதுச்சேரியில் ஏப்.7 முதல் 10-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. தற்போது, மாணவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக மேலும் ஒருநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் (திங்கள்கிழமை) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்த வாரம் முழுவதும் பள்ளிகள் இயங்காது. மாணவர்களே விடுமுறையை என்ஜாய் பண்ணுங்க. SHARE IT


