News July 24, 2024

பட்ஜெட் அறிவிப்பால் லாபம் பார்த்த டாடா

image

நேற்றையை பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 6% வரை குறைக்கப்பட்டது. இதனால் டாடா நிறுவனத்தின் நகை பிராண்டான டைட்டனின் பங்குகள் தோராயமாக 7% உயர்ந்துள்ளன. BSE தரவுகளின் படி, ஆரம்பத்தில் ₹3,252ல் தொடங்கிய டைட்டனின் பங்குகள், 6.63% உயர்ந்து ₹3,468.15ல் முடிவடைந்துள்ளது. இதனால், நேற்று ஒரே நாளில் டைட்டனின் சந்தை மதிப்பு ₹19,140.4 கோடி அதிகரித்துள்ளது.

Similar News

News March 8, 2026

சர்வதேச மகளிர் தினம் உருவானது எப்படி?

image

ஆண்டுதோறும் மகளிர் தினத்தில் வாழ்த்துகள் பறந்தாலும், அதன் பின்னால் உள்ள வலி, வரலாறு பலருக்கும் தெரிவதில்லை. 1908-ல் வாக்குரிமை, சம பணிநேரம் & சம ஊதியம் கேட்டு நியூயார்க்கில் பெண்கள் வீதியில் இறங்கி போராடினர். 1910-ல் ஜெர்மனியை சேர்ந்த கிளாரா ஜெட்கின் முன்மொழிந்ததன் பேரில், 1917-ல் ரஷ்ய பெண்கள் மார்ச் 8-ம் தேதி நடத்திய Peace and Bread போராட்டமே, பின்னாளில் உலக மகளிர் தினம் உருவாக காரணமானது.

News March 8, 2026

மார்ச் 8: வரலாற்றில் இன்று

image

*1908 – பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான திருநெல்வேலி எழுச்சி போராட்டத்தில் நால்வர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். *1911 – சர்வதேச மகளிர் தினத்திற்கான தீர்மானம் முதல்முதலாக நிறைவேறியது. *1989 – இந்திய கிரிக்கெட் மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பிறந்த தினம். *1934- தமிழ் எழுத்தாளர் ML தங்கப்பா பிறந்த தினம். *1972- பாலிவுட் நடிகர் தருண் போஸ் நினைவு தினம்.

News March 8, 2026

7 நாட்களில் நாடு திரும்பிய 52,000 இந்தியர்கள்

image

இஸ்ரேல் – ஈரான் போரை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளின் வான்வெளி போக்குவரத்து ஓரளவு திறக்கப்பட்டதன் மூலம் விமான நிறுவனங்கள் வணிக விமானங்களை இயக்குகின்றன என்றும், மார்ச் 1 முதல் 7-ம் தேதி வரை வளைகுடா நாடுகளில் இருந்து 52,000 பேர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!