News May 13, 2024

ஒரே நாளில் ₹29,016 கோடி இழந்த டாடா மோட்டார்ஸ்

image

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று காலை முதலே சரிவை சந்தித்தது. வர்த்தக நேரத்தின்போது தேசிய பங்குச்சந்தையில் ஒரு பங்கின் மதிப்பு 9.44% வீழ்ச்சியடைந்து ₹948ஆக இருந்தது. மாலையில் வர்த்தக நேர முடிவில் 8.34%ஆக குறைந்தது. முடிவில் ஒரு பங்கின் விலை ₹959.80ஆக நிலை கொண்டது. இந்த வீழ்ச்சியால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இன்று ஒரே நாளில் ₹29,016 கோடி இழப்பு ஏற்பட்டது.

Similar News

News April 6, 2026

வானதி பிரசார கூட்டத்தை புறக்கணித்த அண்ணாமலை

image

கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளரான வானதியை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக, அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் அண்ணாமலையும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோவையில் இருந்தபோதும் அவர் பங்கேற்காதது ஏன் என்று அரசியல் ரீதியாக கேள்வி எழுந்துள்ளது.<<-se>>#TNElection2026<<>>

News April 6, 2026

நடிகை சுபாஷினி மரணம்.. அதிர்ச்சியூட்டும் தகவல்

image

<<19578782>>நடிகை சுபாஷினி<<>> தற்கொலை விவகாரத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3-ம் தேதி சென்னை வந்த அவர் ஷூட்டிங்கிற்காக போரூரில் உள்ள தனியார் குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்துள்ளார். நேற்று இரவு, பெங்களூருவில் உள்ள தனது கணவருடன் வீடியோ காலில் பேசியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது மனமுடைந்த சுபாஷினி, கணவருடன் பேசியபடியே தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது.

News April 6, 2026

தஞ்சை திமுக மேயர் ராஜினாமா

image

தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேயர் முடிய இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சை தொகுதியில் திமுக வேட்பாளராக சண்.ராமநாதன் களமிறங்கியுள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கெனவே, நாகர்கோவில் மேயர் மகேஷ் பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!