News April 22, 2025
டாஸ்மாக் வருமானம் ₹2,488 கோடி அதிகரிப்பு

கடந்த 2024–2025 நிதியாண்டில் டாஸ்மாக் ₹48,344 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிதியாண்டில் மட்டும் டாஸ்மாக் வருமானம் ₹2,488 கோடி அதிகரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு வருமானம் அதிகரித்துள்ள அதே வேளையில் மதுவுக்கு அடிமையாவோர் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 29, 2025
மெஸ்ஸியின் இந்தியா டூர்: அட்டவணை வெளியானது

இந்திய கால்பந்து ரசிகர்களே, உங்கள் விருப்பமான மெஸ்ஸியின் இந்திய பயண அட்டவணை வெளியாகிவிட்டது. இதன்படி, டிச.13 காலையில் கொல்கத்தா, அன்று மாலை ஹைதராபாத், டிச.14-ல் மும்பை, 15-ல் டெல்லியில் அவர் விளையாட்டு, நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் கலந்துகொள்ளவுள்ளார். முன்னதாக, கொச்சி வருவதாக இருந்த மெஸ்ஸியின் பயணம் ரத்தானது. இப்பயணத்தையொட்டி, இந்திய மக்களின் அன்புக்கு மெஸ்ஸி நன்றி தெரிவித்துள்ளார்.
News November 29, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 29, கார்த்திகை 13 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: ஆயில்யம் ▶சிறப்பு: சனி வழிபாட்டு நாள். ▶வழிபாடு: கோளறு பதிகம் பாடி நவகிரகத்தின் ஆசியை பெறுதல்.
News November 29, 2025
2 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

மணிக்கு 7 கிமீ., வேகத்தில் ‘டிட்வா’ புயல் நகர்ந்து வருவதாக IMD கூறியுள்ளது. புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கே 370 கிமீ., தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கில் 470 கிமீ., தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூரில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது.


