News August 31, 2025
டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் அமலாகிறது

TASMAC கடைகளில் மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் நாளை முதல் அமலாகிறது. வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வீசியெறியும் காலி மது பாட்டில்களால் விலங்குகள் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க கஸ்டமரிடம் பாட்டிலுக்கு ₹10 கூடுதலாக பெற்று, பாட்டிலை திருப்பி தரும்போது ₹10 ஒப்படைக்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்த திட்டம் சிவகங்கை, மதுரை, காஞ்சி, திருவள்ளூரில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
Similar News
News September 1, 2025
வைகோவுக்கு மல்லை சத்யா கடிதம்

வைகோவின் கடிதத்திற்கு மல்லை சத்யா பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கட்சியில் இருந்து நீக்கும் முடிவு எடுத்துவிட்டு தற்காலிக நீக்கம், பொறுப்பு நீக்கம் என இரு முரண்பாடான கடிதங்களை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், துரை வைகோவை பொறுப்புக்கு கொண்டு வந்ததை வைகோ ஆதரித்ததாகவும், பல வழக்குகளில் வைகோவுக்கு துணை நின்ற தனக்கு துரோகி பட்டமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News September 1, 2025
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறதா?

விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர், தருமபுரி உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் ₹5 முதல் ₹20 வரை சுங்கக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சரக்கு, வாடகை வாகனங்கள், பஸ் கட்டணங்கள் உயர்வதோடு, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 1, 2025
மதுரையில் EPS.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுபயணத்துக்காக மதுரை சென்ற EPS-க்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரையில் 4-ம் தேதி வரை அதிமுக பொதுச்செயலாளர் EPS சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தென்பகுதிகளில் பின்னடைவை சந்தித்தது அதிமுக. இந்த பயணத்தால் இம்முறை அதிமுகவுக்கு சாதகம் ஏற்படுமா? உங்கள் கருத்தை பதிவிடுங்கள்..