News October 28, 2025
டாஸ்மாக் கடை திறப்பு நேரம் மாறுகிறது

பருவமழை முடியும் வரை டாஸ்மாக் கடைகளை, இரவு 10 மணிக்கு பதில், 1 மணி நேரம் முன்னதாக மூட அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது, மதியம் 12 – இரவு 10 மணி வரை கடைகள் திறக்கப்படுகின்றன. மழை நேரத்தில் வீடுகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுவதால் கடை மூடும் நேரத்தை குறைக்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே, மழையின் சூழலுக்கு ஏற்ப கடைகளை சீக்கிரமாக மூட சில மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
Similar News
News October 28, 2025
விளம்பரத்திற்கு டெல்டாக்காரன் என சொல்லும் CM: விஜய்

ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளை உடனடியாக திமுக அரசு நிறுத்த வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். வெற்று விளம்பரத்திற்காக நானும் டெல்டாக்காரன் என ஸ்டாலின் பெருமை பேசிவருவதாகவும் அவர் சாடியுள்ளார். பருவமழையின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க உண்மையாகவே போர்க்கால அடிப்படையில், நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News October 28, 2025
திமுக சமூகநீதியை மண்ணில் புதைத்துவிட்டது: அன்புமணி

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பெயர்களை சொல்லக்கூட தகுதியில்லாதவர் CM ஸ்டாலின் என அன்புமணி விமர்சித்துள்ளார். சமூகநீதியை திமுக குழி தோண்டி புதைத்துவிட்டதாகவும், அதைப்பற்றி பேசவே உங்களுக்கு தகுதியில்லை எனவும் அவர் சாடியுள்ளார். தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுகவை ஏன் வைகோ, திருமாவளவன் வலியுறுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 28, 2025
அமேசானில் இருந்து 30,000 ஊழியர்களை நீக்க முடிவு

அமேசான் நிறுவனம் 30,000 கார்ப்ரேட் ஊழியர்களை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-க்கு பிறகு(27,000 பேர்) நடக்கும் மிகப்பெரிய வேலை நீக்கமாக இது பார்க்கப்படுகிறது. அமேசான் மொத்தமாக 15% வேலையாள்களை குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. AI வளர்ச்சியின் காரணமாக பலர் வேலையிழப்பார்கள் என முன்னரே அந்நிறுவனத்தின் CEO ஆண்டி ஜாஸ்ஸி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


