News October 22, 2025
டாஸ்மாக் மாடல் அரசு: நயினார் விமர்சனம்

அரசு இயந்திரத்தின் மொத்த கவனத்தையும் சாராய விற்பனையில் திமுக அரசு திருப்பியதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தீபாவளியையொட்டி ₹789 கோடிக்கு மது விற்றது டாஸ்மாக் மாடல் அரசின் கோர முகத்தை தோலுரித்து காட்டுவதாகவும் அவர் சாடியுள்ளார். கனமழையால் டெல்டாவில் நெற்பயிர் சேதமடைந்த நிலையில், தொய்வின்றி மது விற்பதுதான் திமுக அரசின் நாடு போற்றும் நல்லாட்சிக்கான இலக்கணமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News March 23, 2026
கூட்டணி அதிமுக தலைமையில் இல்லை: கனிமொழி

தொகுதி பங்கீடுக்காக அதிமுக டெல்லியில் காத்து கிடப்பதன் மூலம் பாஜக தலைமையில்தான் கூட்டணி செயல்படுவது தெளிவாகி உள்ளதாக கனிமொழி விமர்சித்துள்ளார். அதிமுக தலைமையில் தான் NDA கூட்டணி என்று தெரிவித்தாலும், கூட்டணி பாஜக கட்டுப்பாட்டில் இருப்பதாக திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், NDA கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுக்காக EPS, TTV உள்ளிட்டோர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்துள்ளனர்.
News March 23, 2026
தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்!

தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 26-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, தூத்துக்குடி, அரியலூர் உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று லேசான மழை பதிவானது.
News March 23, 2026
மாணவர்கள் தற்கொலையை தடுக்க புதிய கொள்கை

மாணவர்களின் மனநலம் பாதுகாப்பு, தற்கொலை தடுப்புக்கு TN அரசு புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் மனநல ஆலோசகர்கள், ஆலோசனை மையங்கள் மூலம் மாணவர்களின் தனித் திறனை ஊக்குவிப்பதுடன், நண்பர்கள் இடையே ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்ளும் நல் ஆதரவு நடவடிக்கைகளை தொடங்க வலியுறுத்தியுள்ளது. மனநல ஆலோசனைகளுக்கு 14416, 14417, 104, 1098, 181 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


