News April 23, 2025

டாஸ்மாக் விவகாரம்: TN அரசின் மனு தள்ளுபடி

image

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடையில்லை என்று சென்னை HC உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக்காேரி, TN அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் மனு தாக்கல் செய்தன. இதன்மீது HC உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்போது அந்த மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், அமலாக்கத் துறை தனது சோதனையை தொடரலாம் எனவும் HC தெரிவித்தது.

Similar News

News April 23, 2025

இன்றைய ஐபிஎல் போட்டியில் கொண்டாட்டத்துக்கு தடை

image

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்றைய SRH Vs MI போட்டியின்போது வீரர்கள், நடுவர்கள் கருப்பு பட்டை அணிந்து களமிறங்குவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. போட்டி துவங்குவதற்கு முன்பு மெளன அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவித்துள்ள பிசிசிஐ, பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்றும், Cheers leaders கொண்டாட்டங்களுக்கும் தடை விதித்துள்ளது.

News April 23, 2025

ரேஷன் கடைகள் முன்பு நிழல் கூரை: அமைச்சர் அறிவிப்பு

image

அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் நிழல் கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் வாங்க வரும் மக்கள் வரிசையில் நிற்கையில், வெயிலில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சக்கரபாணி, மரங்கள் நடவும், நிழல் கூரை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News April 23, 2025

ராஃபாவுக்காக திறந்த வாய்.. இப்போ என்ன ஆச்சு?

image

பஹல்காமில் நடத்த தாக்குதல் குறித்து பாலிவுட் பிரபலங்கள் யாரும் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என நெட்டீசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இஸ்ரேல் தாக்குதலால் காசாவின் ராஃபாவில் பலர் உயிரிழந்த போது ‘ALL EYES ON RAFAH’ என்பதை பாலிவுட் பிரபலங்கள் டிரெண்டாக்கினர். ஆனால் இப்போது 28 இந்தியர்கள் கொல்லப்பட்ட நிலையில் பாலிவுட் நட்சத்திரங்கள் மவுனமாக உள்ளனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?

error: Content is protected !!