News January 14, 2025
இன்னும் 2 மணி நேரத்தில் டாஸ்மாக் மூடல்

நாளை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடை மூடுவதற்கு இன்னும் 2 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. இரவு 10 மணி முதல் 16ஆம் தேதி மதியம் 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. அடுத்த 2 மணி நேரத்திற்குள் மட்டுமே சரக்கு வாங்க முடியும் என்பதால், மது பிரியர்கள் கூட்டம் டாஸ்மாக் கடைகளில் அலைமோதுகிறது.
Similar News
News December 11, 2025
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளன. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் சீல் வைத்து பாதுகாக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறனர். வாக்கு இயந்திரங்களின் செயல்பாடு, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆராய்ந்தனர். கூடுதல் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
News December 11, 2025
டிச.14 முதல் விருப்ப மனு பெறலாம்: PMK

2026 தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் டிச.14-டிச.20 வரை விருப்ப மனுக்களை பெறலாம் என பாமக அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி என இரு மாநிலங்களுக்கும் சேர்த்து, பனையூர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை, மனுக்களை பெறலாம் என அன்புமணி தெரிவித்துள்ளார். மனுவில், அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து, தலைமை அலுவலகத்தில் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 11, 2025
பயணிகளின் வீடியோக்கள் வைத்து மிரட்டல்… உஷார்!

உ.பி.,யில் பயணிகளின் அந்தரங்க வீடியோக்கள் பதிவு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூர்வாஞ்சல் ஹைவேயில் காரில் சென்ற புதுமண தம்பதி ரொமான்சில் ஈடுபட்டுள்ளனர். இதை சிசிடிவியில் பதிவுசெய்த உள்ளூர் டோல் பிளாசா மேனேஜர், அதை காட்டி பயமுறுத்தி அவர்களிடம் பணம் பறித்ததுடன், அதை SM-லும் வெளியிட்டுள்ளார். போலீஸ் அவரை விசாரித்ததில் இப்படி பல வீடியோக்களை அவர் பதிவுசெய்தது தெரியவந்துள்ளது.


