News October 24, 2024
‘Tarzan’ நடிகர் காலமானார்

‘Tarzan’ நடிகர் ரோன் ஈலய் (86) காலமானார். இந்த செய்தியை அவரது மகள் கிர்ஸ்டன் தனது சமூகவலைதளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த உலகம் நல்ல மனிதரை இழந்துவிட்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். 1960ல் வெளியான ‘Tarzan’ ஹாலிவுட் டிவி தொடர் மூலம் அவர் உலகளவில் ஃபேமஸானார். 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ள அவர், கடந்த 2001ஆம் ஆண்டில் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றார். பின் எழுத்தாளராக அறியப்பட்டார்.
Similar News
News August 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 436 ▶குறள்: தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. ▶ பொருள்: முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?
News August 23, 2025
₹64,000 சம்பளம்… 10,270 காலியிடங்கள்

IBPS கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஆக.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள 10,270 கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் தமிழகத்துக்கு மட்டும் 894 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி, வயது: 20-28, பிரிலிமினரி & மெயின் தேர்வுகள் அடிப்படையில் ஆள்தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க <
News August 23, 2025
தமிழகத்தில் தாமரை மலர்வதை விஜய் பார்ப்பார்: தமிழிசை

மாநாட்டில் ஒரு கொடிக்கம்பத்தை கூட ஒழுங்காக நட முடியாதவர்கள் எப்படி ஆட்சி நடத்துவார்கள் என விஜய்யை தமிழிசை விமர்சித்துள்ளார். விஜய் அரசியலில் புதியவர், அவர் வரவெல்லாம் பாஜகவை ஒன்றும் செய்யாது என கூறினார். தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாவிட்டாலும் தமிழகத்தில் தாமரை எல்லோரும் ஆச்சரியப்படும் அளவுக்கு மலரப்போகிறது, அதை தம்பி விஜய் பார்க்கத்தான் போகிறார் என்றும் தெரிவித்தார்.