News August 17, 2024
மது விற்பனையை அதிகரிக்க இலக்கு!

அரசு மதுக்கடைகளில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மது விற்பனை 4% குறைந்திருக்கிறது. இதனால், இம்மாதம் முதல் மது விற்பனையை 5% அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலக்கு எட்டப்படவில்லை எனில், மாதாந்திரக் கூட்டத்தில், அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டுமாம். அரசின் இம்முடிவுக்கு ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 1, 2025
விஜய்க்கு அதிர்ச்சி.. மீண்டும் போலீஸை நாடிய தவெக

டிச.5-ம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். ஆனால், அதற்கான அனுமதியை இதுவரை பெற முடியாமல் இருப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 முறை மனு அளித்தும் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதுச்சேரி ஐஜி அலுவலகத்தில் அனுமதி கேட்டு புஸ்ஸி ஆனந்த் 3-வது முறையாக மனு அளித்துள்ளார். இன்னும் 4 நாள்களே இருக்கும் நிலையில், அனுமதி கிடைக்குமா?
News December 1, 2025
காலையில் கல்யாணம்.. மாலையில் விவாகரத்து!

உ.பி.,யில் சொந்த பந்தங்களின் ஆரவாரத்தில் பூஜா – விஷால் என்ற தம்பதிகளுக்கு நவம்பர் 26-ம் தேதி காலை திருமணம் நடந்துள்ளது. புகுந்த வீட்டுக்கு சென்ற 20 நிமிடத்திலேயே, என்ன காரணம் என கூறாமல் இந்த திருமணம் பிடிக்கவில்லை என பூஜா விடாப்பிடியாக கூறியுள்ளார். ஊராரை கூட்டி, 5 மணி நேரமாக பேசி பார்த்தும் பூஜா மனம் மாறாததால், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் விஷால்.
News December 1, 2025
லோக்சபாவில் 3 மசோதாக்கள் அறிமுகம்

வாக்கு திருட்டு மற்றும் SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதால், லோக்சபா இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் நாளை காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மணிப்பூர் ஜிஎஸ்டி 2-வது திருத்த மசோதா, <<18433013>>மத்திய கலால் வரி திருத்த மசோதா<<>> உள்ளிட்ட 3 மசோதாக்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் அறிமுகம் செய்தார்.


