News December 26, 2024
இலக்கு 2026: அதிகாரிகளை அணிசேர்க்கும் விஜய்!

2026 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ள விஜய் IAS, IPS போன்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை தவெக.,வுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார். அத்துடன், சமூகம் & சூழலியல் செயல்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், டாக்டர்களை இலக்கு வைத்து வேட்பாளர் தேடுதல் குழு களமிறங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. களத்தில் சுறுசுறுப்பாக இயங்கிவரும் த.வெ.க,.வினருக்கு இவர்களின் வருகை நிச்சயம் உற்சாகத்தை அளிக்கும்.
Similar News
News July 8, 2025
கடவுள் ராமர் எங்கள் நாட்டில் பிறந்தவர்… நேபாள PM!

நேபாள PM கே.பி.சர்மா ஒலியின் கருத்து சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. வால்மீகி எழுதிய ராமாயணத்தின் அடிப்படையில் ராமர் தங்களது நாட்டில்தான் பிறந்தார் என்று அவர் கூறியுள்ளார். மேலும், சிவனும் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். போலியாக அயோத்தியை ப்ரமோட் செய்வதாக அவர் இந்தியாவையும் விமர்சித்துள்ளார். இவரின் கருத்து குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?
News July 8, 2025
சங்கீதா இருக்கும் இடத்தில் த்ரிஷா.. வைரல் போட்டோ

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களான விஜய், த்ரிஷா ஆகியோர் குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் வெடிக்கும். சமீபத்தில், விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து த்ரிஷா வெளியிட்ட போட்டோவும் பேசுபொருளானது. இந்நிலையில், விண்டேஜ் லுக்கில் இருவரும் இருக்கும் போட்டோ வைரலாகி கோலிவுட் பற்றி எரிந்தது. ஆனால், இது AI மூலம் உருவாக்கப்பட்ட போட்டோ என்றும், அதில் இருப்பது அவரது மனைவி சங்கீதா என்பதும் தெரியவந்துள்ளது.
News July 8, 2025
இன்ஜினியரிங் கவுன்சிலிங் செல்லும் ஸ்டூடண்ட்ஸ்…

◆உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதற்கேற்ற துறையை தேர்ந்தெடுங்க ◆விருப்பமான துறையின் பல்வேறு பாடப் பிரிவுகளையும் அறிந்து கொள்ளுங்கள் ◆தேர்ந்தெடுக்கும் காலேஜின் கல்வித்தரம், உள்கட்டமைப்பு வசதிகள் அறிவது அவசியம் ◆குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு ஏற்ற கல்வி கட்டணம் உள்ளதா? என்பதை கவனியுங்க ◆தேர்ந்தெடுப்பதற்கு முன் பெற்றோர், ஆசிரியர்களிடம் ஆலோசியுங்கள். அவசரப்படாமல் யோசித்து முடிவெடுங்கள்.