News January 10, 2026

‘TAPS’.. புதிய மொந்தையில் பழைய கள்: EPS விளாசல்

image

மத்திய அரசின் UPS-யை பெயர் மாற்றம் செய்து <<18749969>>அறிவிக்கப்பட்டுள்ள TAPS<<>>, ஒரு ஏமாற்றும் திட்டம் என EPS விமர்சித்துள்ளார். இதனை, ‘புதிய மொந்தையில் பழைய கள்’ எனவும் சாடியுள்ளார். அத்துடன், பழைய பென்ஷன் திட்டத்தின் முக்கிய அம்சமான ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் அவ்வப்போது பென்ஷனை உயர்த்தி மறுநிர்ணயம் செய்யும் பரிந்துரை TAPS-ல் இல்லை எனவும், 10% சம்பளம் பிடித்தம் ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News February 12, 2026

BREAKING: இன்று பந்த்.. பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் சற்றுநேரத்தில் தொடங்குகிறது. இதனால், முக்கிய சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பஸ்கள் ஓடுமா? பள்ளிகள் இயங்குமா என கேள்வி எழுந்தது. இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்க கூடாது; இன்று அளிக்கப்பட்ட விடுப்புகள், வார விடுமுறையும் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

News February 12, 2026

DMK மீது கூட்டணி கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை: தமிழிசை

image

திமுகவின் வெற்றி குறித்து காங்., நம்பிக்கையுடன் இருந்தால், இடையில் விஜய் பக்கம் சாய்ந்தது ஏன் என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் பாதுகாப்பாக இல்லை; போதைப்பொருள் மாஃபியா தலைவிரித்தாடுகிறது. இதனால், திமுக ஆட்சி மீது மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக சாடினார். மேலும், திமுக மீது அதன் கூட்டணி கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை எனக்கூறிய அவர் 2026-ல் NDA ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக இருங்க: ஸ்டாலின்

image

சமீபகாலமாக திமுக கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்பை சுட்டிக்காட்டி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிக்க ஆரம்பித்தன. இந்நிலையில், ஒற்றுமை இல்லாமல் இலக்கை அடைய முடியாது; அதனால், தோழமை கட்சிகளுடன் ஒற்றுமை உணர்வோடு நாம் பணியாற்ற வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். இதை செய்தாலே, 2024 போல் 2026 தேர்தலிலும் முழு வெற்றியும் நம் வசமாகிவிடும் எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!