News January 31, 2025

கவர்ச்சிப் பாதைக்கு மாறிய தான்யா

image

நடிகை தான்யா ரவிச்சந்திரன் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். கருப்பன், மாயோன், அகிலன், ரசவாதி உள்ளிட்ட படங்களில் கவர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் நடித்து வந்தவர், சமீப காலமாகவே கிளாமர் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். பட வாய்ப்பு குறைந்ததால், கவர்ச்சிக்கு மாறியதாக ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர். அதே சமயம், அவரது போட்டோக்களுக்கும் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.

Similar News

News March 14, 2026

விடாப்பிடியில் பாஜக.. என்ன செய்யப் போகிறார் EPS?

image

NDA கூட்டணி ஆட்சி கிடையாது, அதிமுகவே ஆட்சியில் அமர வேண்டும் என்ற கருத்தில் EPS விடாப்பிடியாக உள்ளாராம். இதற்கு குறைந்தது 160 தொகுதிகளில் அதிமுக தனித்து போட்டியிட வேண்டிய நிலை உள்ளது. ஆனால், அதிக தொகுதிகளை கேட்கும் பாஜக, அத்தொகுதிகளை தாங்களே பிற கட்சிகளுக்கு பிரித்தளிக்கிறோம் என்றும் கூறுகிறதாம். இது EPS-க்கு பிடிக்காததால் தான் அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறதாம்.

News March 14, 2026

தேமுதிகவால் விசிகவுக்கு வந்த சிக்கல்

image

தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுக்க நினைப்பதால், ஏற்கெனவே கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், விசிகவுக்கு தொகுதிகள் குறைக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால், இதற்கு இருகட்சிகளும் இசைவு கொடுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், திருமாவளவன் கேட்ட 10 தொகுதிகளில் 5 சீட் மட்டுமே கொடுக்க திமுக முடிவு செய்துள்ளதால், விசிகவினர் அதிருப்தியில் உள்ளனராம்.

News March 14, 2026

திமுக மா.செ.,க்கள் கூட்டம் தள்ளிவைப்பு

image

திமுக மா.செ.,க்கள் கூட்டம் நாளை (மார்ச் 15) நடைபெறவுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், மார்ச் 16-ல் நடைபெறும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. நாளை தமிழக தேர்தல் தேதி வெளியாக அதிக வாய்ப்புள்ளதால், இந்த தள்ளிவைப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், மீதமுள்ள கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டையும் முடித்துவிட்டு, மொத்தமாக மா.செ.,க்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கலாம் என்றும் திமுக நினைக்கிறதாம்.

error: Content is protected !!