News November 11, 2025
Tandoori சிக்கன் சாப்பிட்டால் கேன்சர் வருமா?

பொதுவாக சிக்கனில் அதிக புரதம் இருப்பதால் அது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அதனை Tandoori-யாகவோ, Grill-ஆகவோ சாப்பிட வேண்டாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனை நெருப்பில் சுட்டு எடுக்கும்போது இதன் மேல் உருவாகும் கருப்பு லேயரில் Nitrosamine என்ற கெமிக்கல் இருக்கிறதாம். இது கேன்சரை உண்டு பண்ணலாம். எனவே இதனை தவிர்த்துவிட்டு சாப்பிடுவதும் நல்லது என்கின்றனர். பலரது உயிரை காக்கும், SHARE THIS.
Similar News
News November 11, 2025
விஜய் கட்சியில் இருந்து விலகினார்

தவெகவின் ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் அஜய், சீமான் முன்னிலையில் நாதகவில் இணைந்தார். மேலும், அவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரும் நாதகவில் இணைந்துள்ளனர். மேலும், தவெகவில் உழைக்கும் நிர்வாகிகளுக்கு மதிப்பில்லை, ஒருங்கிணைப்பு இல்லை எனவும் அஜய் குற்றம்சாட்டியுள்ளார். <<18239770>>பல மாவட்டங்களில்<<>> பொறுப்புக்கு பணம் வாங்கப்படுவதாக தவெக மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது.
News November 11, 2025
அவரை கேட்டுதான் படங்களுக்கு OK சொல்கிறாரா துருவ்?

‘பைசன்’ வெற்றிக்குப் பிறகு துருவ் விக்ரம் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. தனது அடுத்த படக்கதையையும், இயக்குநரையும் மாரி செல்வராஜே முடிவு செய்யட்டும் என்று தனக்கு வரும் கதைகள் அனைத்தையும் அவருக்கே ரீடைரக்ட் செய்கிறாராம். இதை சில இயக்குநர்கள் விரும்பவில்லையாம். இன்னொரு பக்கம், கதை சொல்ல வருபவர்களிடம் தனது சம்பளத்தையும் உயர்த்தி கேட்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News November 11, 2025
குண்டு வெடித்த இடத்தில் கிடைத்த முதல் தடயம்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல் தடயமாக சம்பவ இடத்தில் புல்லட் ஒன்று சிக்கியுள்ளது. இதை வைத்து, இந்த புல்லட் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எது, அதனுடைய உரிமையாளர் யார், துப்பாக்கி சூடு ஏதும் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே கார் உரிமையாளரிடம் விசாரணை நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.


