News March 28, 2024
TANCET தேர்வு முடிவுகள் வெளியானது

2024ஆம் ஆண்டு TANCET தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. எம்பிஏ, எம்சிஏ படிப்புகள் உள்ளிட்ட பிஜி படிப்புகளில் சேர்வதற்காக தமிழ்நாட்டில் மாநில அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வே TANCET. இந்த ஆண்டுக்கானத் தேர்வு கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. அதற்கான முடிவை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. tancet.annauniv.edu. என்ற இணையதளத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
Similar News
News December 1, 2025
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(டிச.1) காலை 10 மணி முதல் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News December 1, 2025
டிட்வா புயல்.. இன்று கனமழை பொழியுமா?

டிட்வா புயல் கரையை கடக்காமல், கடலோரப்பகுதிகள் வழியாக சென்று வலுவிழந்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை அல்லது நெல்லூர் அருகே தாழ்வு மண்டலமாகவோ, தாழ்வுப்பகுதியாகவோ இன்று நிலைகொள்ள வாய்ப்புள்ளது. அவ்வாறு நிலைகொண்டால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழைக்கான சூழல் ஏற்படும். அதன் பிறகு மீண்டும் கிழக்கு திசை காற்று தமிழக பகுதிகளை நோக்கி வந்து, ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிச.19-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பொதுப் பயன்பாட்டுக்கான அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிப்பது, இந்திய உயர்கல்வி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட 14 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் SIR பணிகள், டெல்லி குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.


