News September 9, 2025

மத்திய அரசின் உயரிய பொறுப்புகளில் தமிழர்கள்!

image

நாட்டின் 2-வது உயரிய பொறுப்பான துணை ஜனாதிபதியாக C.P.ராதாகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார். ஏற்கெனவே, மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர், மத்திய இணையமைச்சராக எல்.முருகன் ஆகியோர் பதவி வகிக்கின்றனர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமனுக்கு பிறகு தமிழகத்தை சேர்ந்த C.P.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆகியுள்ளார்.

Similar News

News April 7, 2026

துரைமுருகன் மீது வழக்குப்பதிவு

image

பறக்கும்படையினர் அளித்த புகாரின் அடிப்படையில், காட்பாடி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலின் போது பட்டாசு வெடித்தது, போக்குவரத்துக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News April 7, 2026

நடிகை சாஷ்வி பாலா மரணம்.. குவியும் அஞ்சலி

image

சென்னையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ‘கயல்’ சீரியல் நடிகை சாஷ்வி பாலா (எ) <<19578782>>சுபாஷினிக்கு<<>> அவருடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போரூர் போலீசார் சுபாஷினியின் கணவர் பிபின் சந்திரனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சற்றுமுன் RDO விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News April 7, 2026

இந்து பழக்கத்தை மாற்ற திமுக முயற்சி: பட்னாவிஸ்

image

சனாதன விரோத, இந்து விரோத அரசாக திமுக உள்ளது என MH CM தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார். மதுரையில் NDA வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த அவர், நாட்டில் காலம் காலமாக நடைமுறையில் உள்ள இந்துக்களின் பழக்கத்தை திமுக மதிக்க மறுக்கிறது என சாடினார். இந்து சமூகத்தை வெறுக்கும் அரசாக உள்ள திமுகவிற்கு, இத்தேர்தலில் மக்கள் பதில் கொடுப்பார்கள் என சூளுரைத்தார்.

error: Content is protected !!