News March 6, 2025
சர்வதேச செஸ் போட்டியில் அசத்தும் தமிழர்கள்

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச செஸ் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த வீரர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் செக் குடியரசில் நடைபெறும் பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர். 6வது சுற்று ஆட்டத்தில் பிரக்ஞானந்தா அமெரிக்க வீரரையும், அரவிந்த் வியட்நாம் வீரரையும் வீழ்த்தியுள்ளனர்.
Similar News
News March 7, 2025
பின்வாங்கினார் டொனால்ட் டிரம்ப்

மெக்சிகோ நாட்டின் மீதான வரி விதிப்பை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் அதிபராக பொறுப்பேற்றவுடன், அண்டை நாடுகளான கனடா & மெக்சிகோ பொருட்கள் மீது 25% இறக்குமதி வரி விதித்தார். இது வர்த்தகப் போரை உருவாக்கும் நிலை ஏற்பட்டதால், சில பொருட்களுக்கு வரியை நிறுத்திவைத்து, டிரம்ப் பின் வாங்கியுள்ளார். ஆனால், கனடா மீதான வரிகள் குறைக்கப்படவில்லை.
News March 7, 2025
ராசி பலன்கள் (07 – 03 – 2025)

➤மேஷம் – நன்மை ➤ரிஷபம் – செலவு ➤மிதுனம் – லாபம் ➤கடகம் – போட்டி ➤ சிம்மம் – விவேகம் ➤கன்னி – தடங்கல் ➤துலாம் – அமைதி ➤விருச்சிகம் – சாந்தம் ➤தனுசு – அன்பு ➤மகரம் – மகிழ்ச்சி ➤கும்பம் – வெற்றி ➤மீனம் – இன்பம்.
News March 7, 2025
கூட்டிக் கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்

1 முதல் 9க்குள் ஏதாவது ஒரு நம்பரை நினைத்துக் கொள்ளுங்கள். அதை 3ஆல் பெருக்குங்கள். அதில் வரும் விடையோடு 3ஐ கூட்டுங்கள். அதில் கிடைக்கும் விடையை மீண்டும் மூன்றால் பெருக்குங்கள். இப்போது உங்களுக்கு ஒரு இரட்டை இலக்க எண் கிடைத்திருக்கும். அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்டுங்கள். இப்போது, உங்களுக்கு கிடைத்திருக்கும் விடை 9. விடை சரியாக இருந்தால் ஷேர் பண்ணுங்க.