News April 25, 2024
வணிகர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

திரவ நைட்ரஜனை உணவில் கலந்து விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பிஸ்கட், ஐஸ்கிரீம், வேஃபர் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களில் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்கும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், திரவ நைட்ரஜனை Packing Gas மற்றும் Freezant ஆக மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அரசு விளக்கமளித்துள்ளது.
Similar News
News September 20, 2025
கடம்ப மரம் நட்ட PM மோடி

டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடம்ப மரம் நட்டதாக பிரதமர் மோடி X-ல் பதிவிட்டுள்ளார். பிரிட்டிஷ் அரசர் மூன்றாம் சார்லஸ் பரிசாக கொடுத்த அந்த மரத்தை எண் 7, லோக் கல்யான் மார்க்கில் (பிரதமரின் அலுவல்பூர்வ இல்லம்) நட்டு நீரூற்றியதாக குறிப்பிட்ட மோடி, மன்னர் சார்லஸ் உடனான சந்திப்பின் போது சுற்றுச்சூழல் மற்றும் அதை பராமரிப்பது தொடர்பாக பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.
News September 20, 2025
ஆஸ்கர் விருதுக்கு ‘ஹோம்பவுண்ட்’ படம் பரிந்துரை

2026 ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பில் ‘ஹோம்பவுண்ட்’ என்ற ஹிந்தி படம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பாகவே இப்படம் கான் உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பாராட்டுகளை பெற்ற நிலையில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
News September 20, 2025
ராசி பலன்கள் (20.09.2025)

➤மேஷம் – துணிவு ➤ரிஷபம் – பக்தி ➤மிதுனம் – நட்பு ➤கடகம் – நலம் ➤சிம்மம் – தனம் ➤கன்னி – இன்பம் ➤துலாம் – போட்டி ➤விருச்சிகம் – பெருமை ➤தனுசு – செலவு ➤மகரம் – உறுதி ➤கும்பம் – சுகம் ➤மீனம் – ஆக்கம்.