News July 27, 2024

தமிழறிஞர்களுக்கு விருது அறிவித்தது தமிழக அரசு

image

தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் விருதுகளுக்கு, ஆகஸ்ட் 30 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காக பாடுபடும் தமிழறிஞர்கள், படைப்பாளர்களை பாராட்டி விருது வழங்கப்படுகிறது. 2024க்கான தேவநேயப் பாவாணர், வீரமாமுனிவர், நற்றமிழ் பாவலர், தூயதமிழ் பற்றாளர், தமிழ் ஊடக விருது ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க <>இந்த<<>> இணையதளத்தை அணுகவும்.

Similar News

News April 6, 2026

சர்ச்சைகளுக்கு அஸ்வத்தாமன் முற்றுப்புள்ளி

image

சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், பண்ருட்டி தொகுதியில் சுயேச்சையாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகனின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் அஸ்வத்தாமனும் பங்கேற்றார். பின்னர் பேட்டியளித்த அவர், தேர்தலில் மோகனின் வெற்றிக்கு பாடுபடுவேன் எனக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். <<-se>>#TNElection2026<<>>

News April 6, 2026

நடிகை சுபாஷினி மரணம்.. உருக்கமான தகவல்

image

‘கயல்’ சீரியல் <<19578782>>நடிகை சுபாஷினியின் தற்கொலை<<>> சின்னத்திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வரும் 12-ம் தேதி அவருக்கு பிறந்த நாள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய குடும்பம் தற்போது கண்ணீரில் தத்தளிக்கிறது. அதுமட்டுமின்றி, வரும் 21-ம் தேதி சுபாஷினிக்கு 2-ம் ஆண்டு திருமண நாளாகும். தன் வாழ்வில் முக்கிய மாதமாக இருக்கும் ஏப்ரலிலேயே சுபாஷினி தற்கொலை செய்திருப்பது பெரும் சோகம். RIP

News April 6, 2026

3 மேட்ச்சில் வெறும் 24 ரன்கள்.. கிரீன் பரிதாபங்கள்

image

KKR அணியால் ஏலத்தில் ₹25.20 கோடிக்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீன் நடப்பு IPL-ல் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறார். கடந்த 3 போட்டிகளில் அவர் 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும், இன்னும் சில போட்டிகளுக்கு பிறகே அவர் பந்துவீசுவார் என கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகைக்கு எடுத்த வீரர் சரியாக ஆடாதது KKR ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

error: Content is protected !!