News March 20, 2024
மீண்டும் பாஜகவில் இணைந்தார் தமிழிசை

நான்கரை ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் பாஜகவில் உறுப்பினராக இணைந்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். அவர் தெலங்கானா ஆளுநராக தேர்வு செய்யப்பட்ட பின் பாஜகவில் இருந்து விலகினார். நேற்று தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், சற்றுமுன் கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் உறுப்பினராக இணைந்துள்ளார். அவர் தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 11, 2025
BREAKING: டெல்லி அணி 4ஆவது வெற்றி

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆர்சிபி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை குவித்தது. இதையடுத்து 164 ரன்களை இலக்காக கொண்டு டெல்லி விளையாடியது. அதிரடியாக விளையாடிய அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 169 ரன்களை சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தனது 4வது வெற்றியை பதிவு செய்தது. கே.எல். ராகுல் 93 ரன்களை விளாசினார்.
News April 11, 2025
தமிழ் புத்தாண்டு விடுமுறை.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தமிழ் புத்தாண்டு விடுமுறை தினத்தையொட்டி (ஏப்.14) சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு 10, 17ம் தேதிகளிலும், குமரியில் இருந்து சென்னைக்கு 11,18ம் தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதேபோல், சென்ட்ரல்- கொல்லத்துக்கு 12, 19ம் தேதிகளிலும், கொல்லம்- சென்ட்ரலுக்கு 13, 20ம் தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
News April 11, 2025
ராசி பலன்கள் (11.04.2025)

➤மேஷம் – போட்டி ➤ரிஷபம் – பெருமை ➤மிதுனம் – உதவி ➤கடகம் – நலம் ➤சிம்மம் – நன்மை ➤கன்னி – பக்தி ➤துலாம் – முயற்சி ➤விருச்சிகம் – ஓய்வு ➤தனுசு – பயம் ➤மகரம் – மேன்மை ➤கும்பம் – அலைச்சல் ➤மீனம் – ஆதரவு.