News June 8, 2024
டெல்லி கிளம்பினார் தமிழிசை

தமிழிசைக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படலாம் என கூறப்படும் நிலையில், அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். அதற்கு முன் பேசிய அவர், தமிழகத்தில் காங்., தனித்து நின்றால் எந்த இடத்திலும் டெபாசிட் கூட வாங்காது என விமர்சித்தார். மேலும், காங்., வாங்கிய வாக்குகள் அனைத்தும் திமுகவின் வாக்குகள் தான். 28 ஒட்டு துணிகளை வைத்து போர்வையை போர்த்தி இருப்பவர்கள், ஒழுங்காக இருப்பவர்களை குறை கூறுகிறார்கள் என விமர்சித்தார்.
Similar News
News September 24, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

கடந்த ஒரு வாரமாக உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்ததால், நகை பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ₹40 குறைந்து ₹10,600-க்கும், சவரனுக்கு ₹320 குறைந்து ₹84,800-க்கும் விற்கப்படுகிறது. கடந்த 2 நாளாக காலை, மாலை என இருமுறை விலை உயர்ந்த நிலையில், இன்று மாலை விலை குறையுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
News September 24, 2025
CM இடது கையால் சமாளித்து வருகிறார்: உதயநிதி

திமுக கூட்டணி உடைந்துவிடாதா என ஏங்கி பல்வேறு சதி திட்டங்களை பாஜக செயல்படுத்தி வருவதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இவற்றை எல்லாம் CM ஸ்டாலின் தனது இடது கையால் சமாளித்து வருவதாகவும், இதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அதிமுகவில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா, தீபா, தீபாவின் டிரைவர், செங்கோட்டையன் என பல அணிகள் உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
News September 24, 2025
அனிருத், மணிகண்டனுக்கு கலைமாமணி விருது

2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, அனிருத், சாண்டி மாஸ்டர், இயக்குநர் லிங்குசாமி, பாடலாசிரியர் விவேகா, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், நடிகர் மணிகண்டன் ஆகியோருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாடகர் ஜேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.