News March 18, 2024
புதுச்சேரியில் தமிழிசை போட்டி?

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்த தனது ராஜினாமாக கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். இவர் புதுச்சேரியில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
Similar News
News September 18, 2025
அரசு ஊழியர் கோப்பு தேக்கினால் ஒருநாளைக்கு ரூ.250 அபராதம்!

புதுச்சேரியில், அரசு கோப்புகளை தாமதப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இனி, உரிய காரணமின்றி குறிப்பிட்ட காலத்திற்கு மேல் கோப்புகளை தேக்கி வைத்தால், நாள் ஒன்றுக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்படும். இதன்மூலம், நிர்வாகத்தில் தாமதங்கள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 18, 2025
செப்.25ல் சர்வதேவ மருத்துவர்கள் மாநாடு துவக்கம்!

புதுச்சேரியில் சர்வதேச அளவிலான மருத்துவர்கள் மாநாடு வருகின்ற 25-ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. விநாயகர் மிஷன் மருத்துவமனையின் டாக்டர் நவீன் இத்தகவலைத் தெரிவித்தார். இந்த மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு, 350-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். இதையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் நடக்கிறது.
News September 18, 2025
புதுச்சேரி: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம்.<