News April 15, 2024
அண்ணாமலைக்கு தமிழருவி மணியன் ஆதரவு

உண்மை, நேர்மை, ஒழுக்கம் நிறைந்த அண்ணாமலை நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார். கோவையில் பேசிய அவர், இரு திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க 55 ஆண்டுகளாக ஒரு தவத்தைப் பின்பற்றி வருகிறேன். அந்தத் தவத்தை நிறைவேற்றும் மனிதராக அண்ணாமலையைப் பார்க்கிறேன். அவர் மூலம் அரசியல் மாற்றம் வரும் எனக் கூறினார்.
Similar News
News April 28, 2025
இரட்டை இலை சின்னம் முடக்கம்?

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று OPS தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் EPS & OPS நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் விசாரணை நடைபெறுகிறது. இதில், அதிமுக சார்பாக C.V.சண்முகம் ஆஜராகியிருக்கிறார். மனுதாரர்கள் தரப்பில் O.P.ரவீந்திரநாத், K.C.பழனிசாமி ஆஜராகியிருக்கின்றனர்.
News April 28, 2025
மெஹுல் சோக்சி, நீரவ் மோடி ஆவணங்கள் தீக்கிரை?

டெல்லி: ED தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய வழக்கு ஆவணங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. அதில், மெஹுல் சோக்சி, நீரவ் மோடி உள்ளிட்டோர் வழக்கின் விசாரணை பதிவுகள் அழிந்து போயிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், வழக்கின் உண்மையான ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும் நகல் மட்டுமே அங்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அண்மையில்தான் சோக்சி பெல்ஜியத்தில் கைது கைதானார்.
News April 28, 2025
கோர விபத்து.. PM மோடி இரங்கல்

ம.பி. சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாந்த்சௌர் பகுதியில் பைக் மீது மோதி வேன் கிணற்றில் விழுந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மோடி, தலா ₹2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.